கல்லீரல் கோளாறு என்பது பெரும் ஆபத்தை தரும், கல்லீரல் பழுதை அடைந்து விட்டால், அதன் ஆரம்பத்தில் சில அறிகுறிகள் தென்படும்.
அதனை கண்டறிந்து அப்போதே தீர்வு பெற்றுவிட்டால் எவ்வித பிரச்சனையும் வராமல் தப்பித்து விடலாம்.
கல்லீரல் பாதிப்பின் ஆரம்பக்கால அறிகுறிகள்?
- அடிக்கடி வழக்கத்திற்கு மாறான களைப்பு மற்றும் சோர்வு போன்ற அறிகுறிகள் தென்பட்டால், கல்லீரல் கோளாறு உள்ளது என்பதை குறிக்கிறது.
- மிகுந்த சோர்வுடன் சேர்த்து வாந்தி, கவனக் குறைவு, வயிற்றுப்போக்கு போன்றவையும் உண்டாகும்.
- மஞ்சள்காமாலை கல்லீரல் பாதிப்புடன் தொடர்புடையது, எனவே மஞ்சள்காமாலை அறிகுறிகள் தெரிந்தாலும் கூட அது கல்லீரலில் பிரச்சனைகள் உள்ளது என்று அர்த்தம்.
- உடலில் அதிக கொழுப்பு, இருதய கோளாறுகள், சர்க்கரை நோய், சிறுநீரக கோளாறுகள், அதிக எடை போன்ற பிரச்சனைகளும் கல்லீரல் பிரச்சனையின் அறிகுறியாகும்.
- ரத்தம் உறையும் பிரச்சனை இருந்தால் கல்லீரலில் உள்ள அதிகப்படியான நச்சுக்களால் உண்டாகலாம்.
- அலர்ஜி போன்ற சரும பிரச்சனைகள், கால்கள் மற்றும் அடிவயிற்றில் வீக்கம் ஏற்பட்டால், கல்லீரல் பாதிப்பு உள்ளது. என்று அர்த்தமாகும்.
- மலம் கழிக்கும் போது அதன் நிறத்தில் மாற்றம் தென்பட்டால் கல்லீரல் பாதிப்பின் அறிகுறியாகும்.
- கல்லீரல் பாதிப்பு இருந்தால் கணுக்கால் மற்றும் கால்களில் நீர் தேங்கி வீக்கமாக காணப்படும். இவ்வாறு இருந்தால் அதிக கவனம் தேவை.
தடுக்க என்ன செய்யலாம்?
கல்லீரலில் பாதிப்புகள் வராமல் தடுக்க பூண்டு, பச்சை காய்கறிகள், கீரைகள், மஞ்சள், எலுமிச்சை சாறு, பீட்ரூட் மற்றும் திராட்சை ஆகியவற்றை அடிக்கடி சாப்பிட வேண்டும்.