இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கா....?

Report Print Printha in நோய்

பரம்பரை மரபணு, கதிர்வீச்சு, புற்றுநோய், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு போன்ற சில காரணங்களால் மூளையில் ரத்தக்கட்டு ஏற்படலாம்.

மூளையில் ரத்தக்கட்டு ஏற்படுவது ஒரு தொற்றுநோய் அல்ல, இது எந்த வயதினரையும் தாக்கும், ஆனால் வயது அதிகரிக்கும் போது மூளையில் ரத்தக்கட்டு ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கும்.

அதுவும் சில அறிகுறிகளை வைத்து மூளையில் ரத்தக்கட்டு இருப்பதை எளிதில் கண்டுபிடித்து விடலாம்.

மூளையில் ரத்தக்கட்டு இருப்பதன் அறிகுறிகள்?

  • இருமல், தும்மல், குனிதல் மற்றும் கடுமையான வேலையை செய்தல் ஆகிய சூழ்நிலைகளில் தலைவலி கடுமையாக இருந்தால் அவை அனைத்தும் மூளையில் அழுத்தத்தை அதிகரிக்கும்.

  • அதிகப்படியான தலைவலியால் குமட்டல் மற்றும் உட்கார்தல், படுத்தல் ஆகிய நிலையிலும், நிற்கும் போதும் காய்ச்சல் அதிகரிக்கும்.

  • வலிப்பு நோய்கள் மூளையில் ரத்தக்கட்டு இருப்பதற்கான இயல்பான ஒரு அறிகுறி. அதுவும் கைகள், கால்கள் அல்லது முழு உடலையும் உதரும் காக்காய் வலிப்பு நோயும் சிலருக்கு ஏற்படலாம்.

  • தூக்கத்தில் இருக்கும் போது திடீரென விழிப்பு ஏற்படுவது மூளையில் ரத்தக்கட்டு இருப்பதற்கான ஒரு அறிகுறி ஆகும்.

  • கண் பார்வையிலும் மாற்றத்தை ஏற்படுத்தி, மங்கலான பார்வை, மிதக்கும் பொருட்கள் மற்றும் சுரங்கப்பார்வை ஆகிய அறிகுறிகள் இருப்பதும் மூளை ரத்தக்கட்டின் அறிகுறியே.

  • விநோதமான உணர்வுகள் பயம் அல்லது தீவிர யோசனை, விநோதமான வாசனைகள் அல்லது கருமையடைதல், பேச்சு திணறல் மற்றும் ஞாபக மறதி போன்ற அறிகுறிகளும் ரத்தக்கட்டு இருப்பதை குறிக்கும்.

  • உடலின் ஒரு பகுதி செயலிழந்து போதல், நுகர்தல் உணர்வை இழத்தல், அவ்வப்போது பேச்சு திணறல் மற்றும் உடல் பலவீனம் அடைதல் ஆகியவையும் ரத்தக்கட்டின் சில அறிகுறிகள்.

  • கண்கள் இயல்புக்கு மாறாக துடித்தல், குமட்டல் மற்றும் கழுத்து கடினமடைதல், பொலிவற்ற முகம் போன்றவை மூளை ரத்தக்கட்டின் அறிகுறிகள்.

  • மாதவிடாய் கோளாறு, மலட்டுத்தன்மை, எடை அதிகரித்தல், மந்தம், உயர்ந்த ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவை மூளையில் ரத்தக்கட்டு இருப்பதை குறிக்கிறது.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்