இப்படிப்பட்ட வயிறு வீக்கம்: எந்த நோய்களின் அறிகுறி?

Report Print Printha in நோய்

சுற்றுச்சூழல் மாசுபாடு, மன அழுத்தம், பல்வேறு மருந்துகள் மற்றும் முறையற்ற டயட் போன்றவை வயிறு வீக்கத்திற்கு காரணமாக அமைகிறது.

அதுவும் நாள்பட்ட வயிறு வீக்கம் பல நோய்களின் அறிகுறியாக உள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நாள்பட்ட வயிறு வீக்கம் என்ன நோய்கள்?
 • வயிறு நிறைந்தது போன்ற உணர்வு, இடுப்பு வலி மற்றும் தொடர்ச்சியான வயிறு வீக்கம் போன்றவை கருவகப் புற்றுநோயின் அறிகுறிகளாகும்.
 • சிறுநீர் கழிக்கும் போது மற்றும் உடலுறவு கொள்ளும் போது வலி, இடுப்பு வலி, வெள்ளைப்படுதல், ரத்தப்போக்கு போன்றவை கருப்பை புற்றுநோயின் அறிகுறிகளாகும்.
 • வயிற்றுப் புற்றுநோய் முற்றிய நிலையில் குமட்டல், வாந்தி, தலைச்சுற்றல், செரிமான பிரச்சனை மற்றும் உடல் குறைவு போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தும்.
 • மஞ்சள்காமாலை நோயுடன் வயிறு வீக்கம், முதுகு வலி, அடிவயிற்று வலி, பசியின்மை மற்றும் எடை குறைவு போன்றவை கணைய புற்றுநோய்க்கான அறிகுறியாகும்.
 • குடல் புற்றுநோய் முற்றிய நிலையில் இருந்தால், குடலினுள் அடைப்பு ஏற்பட்டு வயிறு வீக்கத்துடன், மலச்சிக்கல் மற்றும் ரத்தக்கசிவு போன்ற பிரச்சனை ஏற்படும்.
 • இடுப்பு அழற்சி நோய் இருந்தால், அது இடுப்பு வலி, வயிறு வீக்கம் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறியை வெளிப்படுத்தும்.
 • கிரோன் நோயின் ஆரம்ப கால அறிகுறியாக வயிறு வீக்கமும், முற்றிய நிலையின் போது வாந்தி எடுத்தல், குமட்டல் மற்றும் வயிறு வீக்கம் போன்ற அறிகுறிகள் வெளிப்படும்.
 • டயட் அல்லது உடற்பயிற்சி செய்யாமல், 10%-த்திற்கு அதிகமாக உடல் எடை குறைவுடன், வயிறு வீக்கமாக காணப்படும்.
 • வயிறு வீக்கத்துடன், மலச்சிக்கல், குமட்டல் மற்றும் வாந்தி போன்றவை இருந்தால், அது குடலில் கட்டிகளால் அடைப்பு ஏற்பட்டிருப்பதை காட்டும் அறிகுறியாகும்.
 • கல்லீரல் அழற்சி போன்றவை கல்லீரல் நோய்களை ஏற்படுத்தி, நாளடைவில் அது கல்லீரல் புற்றுநோயை உண்டாக்கும். அதன் அறிகுறியாக வயிறு வீக்கம், கண்கள் மற்றும் சருமம் மஞ்சளாக இருக்கும்.
 • அடிவயிறு மற்றும் இடுப்பு பகுதியில் நீர் கோர்வை ஏற்பட்டிருந்தால், அது வயிறு வீக்கத்துடன், அதிகளவு உடல் எடையை இழப்பை உண்டாக்கும்.
 • இரைப்பைக் கோளாறு இருந்தால், அதன் அறிகுறியாக வாய்வு தொல்லை மற்றும் நாள்பட்ட வயிறு வீக்கம் போன்றவை ஏற்படும்.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்