அரிப்பு என்பது அறிகுறியா? என்ன நோயாக இருக்கும்?

Report Print Printha in நோய்

உடலியல் ரீதியாக அரிப்பு என்பது ஒவ்வாமையின் வெளிப்பாடு. இதை செயல்படுத்துவது நம் தோலில் உள்ள மாஸ்ட் செல்கள் ஆகும்.

சில நேரம் இந்த அரிப்பு இதமாகவும், இன்பமாகவும் இருக்கும். ஆனால் அதுவே பல நேரம் எரிச்சலையும், வெறுப்பையும் ஏற்படுத்துவதாக மாறிவிடும்.

அரிப்பு ஏற்படுவது ஏன்?

நம் உடலுக்கு ஒவ்வாத பொருள் முதல் முறையாக நம் உடம்பிற்குள் நுழையும் போது, ரத்தத்தில் உருவாகும் எதிர்ப்பாற்றல் புரதமான இம்யூனோகுளோபுலின் ஈ, ஒவ்வாமை பொருளுடன் சேர்ந்து மாஸ்ட் செல்களைத் தூண்டும்.

இதன் காரணமாக மாஸ்ட் செல்கள் ஹிஸ்டமின், லுயூக் கோட்ரின் எனும் வேதிப்பொருட்களை வெளியேற்றும்.

இவை ரத்தக்குழாய்களை விரிவடையச் செய்து அங்குள்ள நரம்பு முனைகளை தாக்கி அரிப்பு, தடிப்பு, தோல் சிவப்பது போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தும்.

இவ்வாறு தோன்றும் அரிப்பிற்கான காரணம் என்னவென்பதை கண்டறிந்து அதற்கான மருத்துவத்தை செய்தால் அவை குணமாகிவிடும்.

அரிப்பை ஏற்படுத்தும் பொருட்கள்?

  • செயற்கை அழகு சாதனப் பொருட்களான சோப்பு, நறுமணப் பொருட்கள், குங்குமம், தலைச்சாயம், உதட்டுச்சாயம், நகப்பூச்சு, முகப்பவுடர், கிரீம் போன்றவை நம் உடலுக்கு ஒத்துக்கொள்ளவில்லை எனில் அது அரிப்பை ஏற்படுத்தும்.

  • சிலருக்கு கம்பளி, டெர்லின், நைலான், விலங்குகளின் தோல் போன்ற ஆடைகளை அணிந்துக் கொள்வதால் உடல் முழுவதும் அரிப்பு ஏற்படும்.

  • நீரிழிவு நோய், ரத்தச்சோகை, மஞ்சள் காமாலை, சிறுநீரக கோளாறு, தைராய்டு, பித்தப்பை பிரச்சனை, மல்ட்டிபிள் ஸ்கிலிரோசிஸ் எனும் மூளை நரம்பு பிரச்சனை, பரம்பரை போன்ற காரணத்தினாலும் அரிப்பு உண்டாகலாம்.

  • அன்றாடம் நாம் சாப்பிட்ட உணவுகளில் சில நமக்கு ஒத்துக் கொள்ளவில்லை எனில், அதனால் கூட உடலில் அரிப்பு ஏற்படலாம்.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்