அதிக உடல் பருமனான பெண்களில் புற்றுநோய் தாக்கம் தொடர்பில் வெளியான எச்சரிக்கை

Report Print Givitharan Givitharan in நோய்

புற்றுநோய்க்கும் பெண்களின் உடல் பருமன் அதிகரிப்புக்கும் இடையில் தொடர்பு உண்டா என ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது உடல் பருமன் அதிகமாக உள்ள பெண்களில் மார்பு புற்றுநோய் கட்டிகளின் அளவு மிகவும் பெரியதாக இருக்கின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்விற்காக ஐக்கிய இராச்சியத்தில் உள்ள 50 தொடக்கம் 70 வயதான பெண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்கள் மூன்று வருடங்களாக அவதானிக்கப்பட்ட பின்னரே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

எனவே புற்றுநோய் தாக்கத்துக்கு உள்ளான பெண்கள் தமது உடல் பருமனை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் ஊடாக புற்றுநோய் தாக்கத்தினையும் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முடியும் என தெரிவித்துள்ளனர்.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்