ஒற்றை தலைவலி என்பது நோயா? யாரை அதிகம் தாக்கும்?

Report Print Printha in நோய்
487Shares
487Shares
lankasrimarket.com

தலைவலி மற்றும் ஒற்றை தலைவலி வருவதற்கு பல காரணங்கள் உள்ளது. அதில் நடைமுறை வாழ்க்கை, பழக்க வழக்கங்கள் ஆகியவை பொறுத்து ஒற்றை தலைவலி தாக்கும் என்று மருத்துவம் கூறுகிறது.

ஆனால் இதுகுறித்து ஆராய்ச்சிகள் மேற்கொண்ட போது, பரம்பரையாகவும் இந்த நோய் மனிதனை தாக்குகிறது என்பதை மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ஒற்றை தலைவலி என்பது நோயா?

ஒற்றை தலைவலி எனபது ஒருவித நரம்பியல் தொடர்பான நோயாகும். மூளையில் ஏற்படும் ஒரு நிகழ்வின் தாக்கத்தினால் ஒற்றை தலைவலி ஏற்படுகிறது.

ஒற்றைத் தலைவலி எந்த நோயின் அறிகுறி?

ரத்தசோகை, உயர் ரத்த அழுத்தம், மூளை அழற்சி, மூளைக் கட்டிகள் ஆகிய நோய்களின் அறிகுறியாகவும் ஒற்றை தலைவலி வரக்கூடும்.

தலைக்கு செல்லும் நரம்புகள் சுருங்கி ரத்த ஓட்டம் தடைபட்டாலும் ஒற்றை தலைவலி வரும். பெண்களுக்கு மாதவிலைக்கு காலங்களில் ஒற்றை தலைவலி வரக்கூடும்.

தலைவலி யாரை அதிகமாக தாக்கும்?

பொதுவாக 40 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு ஒற்றை தலைவலியின் தாக்கும் அதிகம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

ஒருவேளை குழந்தைகளை ஒற்றை தலைவலி தாக்கினால், அது சத்து குறைபாடு, பார்வை குறைபாடு மற்றும் பரம்பரை சார்ந்த குறைபாடுகள் போன்றவை காரணமாக இருக்கலாம்.

தலைவலி ஏற்படுவதற்கான காரணங்கள்?
  • தலையில் புண், சீழ்பிடித்தல், கழுத்து, தலையில் ஏற்படும் தலை பிடிப்பு, மூளை ரத்தக்குழாய் போன்ற பாதிப்புகளினால் தலைவலி ஏற்படும்.
  • மெல்லுதல், அதிகமாக பேசுதல், பல் துலக்குதல், குளிர்ந்த நீரில் முகம் கழுவுதல் போன்ற எது வேண்டுமானாலும் தலைவலியை தூண்டலாம்.
  • கிட்டப்பார்வை, தூரப்பார்வை, கண் சிவந்து போதல் போன்ற பார்வை குறைபாடு, கண்ணில் காயம் ஏற்படுவதாலும் தலைவலி வரலாம்.
  • காதின் மையப்பகுதி நரம்புகளில் ஏற்படும் ஒழுங்கின்மையால் கழுத்து வலி மற்றும் கடுமையான தலைவலி ஏற்படலாம்.
  • பல்வலி, நோய் தொற்றுகள், தைராய்டு ஹார்மோன் சுரப்பு குறைதல் போன்றவற்றினாலும் தலைவலி ஏற்படும்.
  • உடலுக்கு போதிய அளவு உணவு உட்கொள்ளாமை, தேவையான அளவு ஓய்வு எடுக்காமல் போவது, உடல்சூடு, வயிறு தொடர்பான நோய்கள், மன அழுத்தம் ஆகியவற்றாலும் தலைவலி வரலாம்.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்