வெள்ளை நிற நாக்கு.. மலச்சிக்கல்: என்ன நோயாக இருக்கும்?

Report Print Printha in நோய்

மாத்திரைகள், மன அழுத்தம், ஜீரண நோய்கள், அதிகமான மதுப் பழக்கம், போன்றவை காரணமாக உணவுக் குழாயின் செயல்பாடுகள் பாதிப்படைகிறது.

இந்த குடலில் பாதிப்புகள் உள்ளது என்பதை உணர்த்தும் வகையில் ஒருசில அறிகுறிகள் தென்படும். அவைகள்,

குடல் பாதிப்பினால் ஏற்படும் அறிகுறிகள்?
  • வயிற்றில் காற்று நிரம்பியது போன்று பசி உணர்வு இல்லாமல் இருந்தால், அது வயிற்று உப்பிசம், வாய்வு காரணமாக இருக்கும்.
  • திடீரென மலத்துடன் ரத்தம் கலந்து வருவது அல்லது மலச்சிக்கல் போன்ற பிரச்சனை ஏற்பட்டால் அசாதாரணம் கூடாது.
  • குடல் பாதிப்பாக இருந்தால் மலம் மிக மோசமான துர்நாற்றத்துடன் வெளிவரும். மிக அடர் நிறத்தில் உருவாகும்.
  • அடிவயிற்றில் தாங்க முடியாத வலி அடிக்கடி உண்டாகும். அதோடு அடிக்கடி வயிற்றுப் பிடிப்பு பிரச்சனை உண்டாகும்.
  • செரிமானக் கோளாறுகள், குமட்டல், வாந்தி போன்ற பிரச்சனைகள் ஏற்படும். அதற்கு உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
  • உள்ளுறுப்புகள் ஆரோக்கியமாக இருந்தால், நாக்கின் இயற்கை நிறம் லேசான பிங்க் நிறத்தில் இருக்கும். ஆனால் அதுவே நாக்கு வெள்ளை நிறத்தில் இருந்தால் அது உணவுக் குழாய் பாதிப்பு உள்ளது என்று அர்த்தம்.
  • செரிமானக் கோளாறினால் உண்டாகும் மூட்டு வலி அடிக்கடி வந்தால் உணவுக் குழாயை பாதுகாக்கும் உணவுகளை சாப்பிட வேண்டும்.
குடல் பாதிப்பு வராமல் தடுக்கும் உணவுகள்?

புரதச்சத்து மிக்க உணவுகள், தானிய வகை உணவுகள், காய்கறிகள் போன்றவற்றை அதிகம் சாப்பிட வேண்டும்.

ஆனால் கொழுப்பு மிக்க அசைவ உணவுகள், கார்போஹைட்ரேட், மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...