நகங்கள் உடைந்து தோல் உரிந்தால் என்ன நோய்? யாருக்கு வரும்?

Report Print Printha in நோய்

பற்கள், எலும்புகள், நரம்புகள் மற்றும் தசைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில் அதற்கு கால்சியம் மிகவும் அவசியம்.

இத்தகைய கால்சியம் நம் உடலில் குறைவாக இருந்தால், பல்வேறு நோயின் பாதிப்புகள் உண்டாகும்.

கால்சியம் குறைபாட்டால் வரும் பாதிப்புகள்?

  • நகங்கள் உடைவது, நகங்களில் தோல் உரிதல் போன்ற அறிகுறிகள் இருந்தால், கால்சியம் குறைபாடு என்று அர்த்தம்.

  • அடிக்கடி சதைகளுக்கு இறுக்கம் ஏற்படும். அதனைத் தொடர்ந்து தசைப் பிடிப்புகள் அல்லது வலியை உணரக்கூடும்.

  • கால்சியம் உடலில் குறைவாக இருக்கும் போது, அதன் எதிர்விளைவாக நரம்பு மண்டலம் மோசமாக பாதிக்கப்பட்டு, ஞாபக மறதி உண்டாகும்.

  • மன இறுக்கம், மிகுதியான அளவில் உடல் சோர்வு நிலையை அடிக்கடி சந்திக்கக்கூடும்.

யாருக்கெல்லாம் கால்சியம் குறைபாடு வரும்?

  • உணவுகளில் அதிகமாக உப்பு சேர்த்து சாப்பிடுபவர்களுக்கு கால்சியம் சத்தின் அளவு குறையும்.

  • கேஃபைன் நிறைந்த காபியை ஒரு நாளைக்கு பலமுறை குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு கால்சியம் குறையும்.

  • செரிமான பிரச்சனை உள்ளவர்கள் சோடாவை குடிப்பதால், அதில் உள்ள கெமிக்கல் நம் உடலில் உள்ள கால்சியத்தை குறைத்துவிடும்.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்