தலைமுடி பழுப்பாக இருந்தால் மாரடைப்பு ஏற்படுமாம்! அதிர்ச்சி தகவல்

Report Print Meenakshi in நோய்

பழுப்பு நிறத்தில் உள்ள தலைமுடிக்கும் மாரடைப்புக்கு நெருங்கிய தொடர்பு உள்ளதென ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

எகிப்து நாட்டில் உள்ள பல்கலைகழக பேராசியர்கள் நடத்திய ஆய்வில் பழுப்புநிறத் தலைமுடி ஏற்படும்போது மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

டிஎன்ஏ குறைபாடு, மன அழுத்தம், உடலுக்கு போதிய ஆக்ஸிஜன் கிடைக்காதது, புகைப்பிடித்தல் ஹார்மோன் மாற்றம், பரம்பரை பாதிப்பு போன்றவற்றினால் செல்களின் இயக்கத்தில் பாதிப்பு ஏற்படுவதால் தலைமுடியும் பாதிக்கப்படுகிறது.

தலைமுடியின் நிறமானது பழுப்பாக மாறும்போது நமது இதயத்தில் ரத்த அழுத்தம் மற்றும் ரத்தக்குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகளும் நிகழ அதிக வாய்ப்புகள் உள்ளதென கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் எப்போது வேண்டுமானாலும் மாரடைப்பு ஏற்படலாம் என இந்த ஆய்வின் மூலமாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments