இந்த அசாதாரண அறிகுறிகள் பெரிய ஆபத்து.. அலட்சியம் வேண்டாம்!

Report Print Printha in நோய்

உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கு முன் நமது உடலில் அசாதரணமாக தோன்றும் ஒருசில அறிகுறிகளை அலட்சியப்படுத்தினால் அது தீவிரமாகி, மாரடைப்பு, இதயம் மற்றும் சிறுநீரக செயலிழப்பு, பக்கவாதம் போன்ற நோய்களை சந்திக்க நேரிடும்.

எனவே உயர் ரத்த அழுத்தத்தின் அறிகுறிகளாக தோன்றும் ஒருசில சாதாரண அறிகுறிகள் இதோ!

உயர் ரத்த அழுத்தத்தின் அறிகுறிகள் என்ன?

  • மூக்கில் இதுவரை ரத்தம் வராமல் திடீரென்று ஏற்பட்டால், அது உயர் ரத்த அழுத்தம் பிரச்சனை இருப்பதற்கான ஒரு அறிகுறியாகும்.

  • தலைவலி என்பது ஒரு சாதாரண விஷயம் என்றாலும் அது தினமும் ஏற்பட்டால், உயர் இரத்த அழுத்த பிரச்சனையால் மூளையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம்.

  • மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டால், அது உயர் ரத்த அழுத்தத்தினால் இதயத்தில் வேலைப்பளு அதிகரித்து, அதனால் சீராக ரத்தத்தை நுரையீரல் மற்றும் உடலின் மற்ற பாகங்களுக்கு செலுத்த முடியாமல் உள்ளது என்று அர்த்தம்.

  • தலைச்சுற்றல் மற்றும் மிகுந்த சோர்வு இருந்தால், அது நுரையீரலுக்கு போதிய அளவில் ரத்தமும், மூளை மற்றும் உடலின் இதர பாகங்களுக்கு ஆக்ஸிஜன் கிடைக்கவில்லை என்று அர்த்தம்.

  • திடீரென்று கண் பார்வையில் ஒருவிதமாக மங்கலாக தெரியும் உணர்வுகள் இருந்தால், அது உயர் ரத்த அழுத்தம் இருப்பதற்கான ஒரு அறிகுறியாகும்.

குறிப்பு

உயர் ரத்த அழுத்தற்கான மேல் கூறப்பட்டுள்ள அறிகுறிகள் தென்பட்டால், தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரை அணுகுவது மிகவும் சிறந்தது.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments