புற்றுநோயின் முக்கிய அறிகுறிகள் இவை தான்: நிச்சயம் பகிருங்கள்

Report Print Raju Raju in நோய்

புற்றுநோய் உயிர்கொல்லி நோயாகும், இது ஒருவருக்கு வந்திருப்பதை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துவிட்டால் நோயின் தன்மையை பற்றி ஆராய்ந்து காப்பாற்றுவதற்கும் வழிவகைகள் உள்ளது.

புற்றுநோய்களுக்கான முக்கிய அறிகுறிகள்
உடல் வலி

உடல் பகுதிகளில் வலி ஏற்பட்டு பலருக்கு பின்னர் சரியாகிவிடும். ஆனால் சரியாகாமல் தொடர்ந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

உதாரணத்துக்கு வயிற்றை சுற்றி தொடர்ந்து வலி இருந்தால் அது கருப்பை புற்றுநோயாக இருக்கலாம்.

தொடர் இருமல், தொண்டை கமறல்

இருமல், சளி சரியாகாமல் கடுமையாக தொடர்ந்தால் உடனே மருத்துவரை காண வேண்டும். காரணம் அது நுரையீரல் புற்றுநோயாக கூட இருக்கலாம்.

சிறுநீர் கழித்தலில் மாற்றம்

சிறுநீரில் இரத்தம் கலந்து வந்தாலோ அல்லது வழக்கத்தை விட சிறுநீர் அதிகமாகவோ, குறைவாகவோ கழிந்தாலும் சிறுநீரக புற்று நோயாக இருக்க வாய்ப்புள்ளது.

மலம் கழித்தலில் மாற்றம்

மலத்தின் நிறத்திலோ அல்லது மலம் கழித்தலின் நேரத்திலோ அதிக மாற்றம் தெரிந்தால் குடல் புற்று நோயாக இருக்க வாய்பிருக்கிறது.

கடும் உடல் சோர்வு

காரணமேயில்லாமல் நாள் முழுவதும் தொடர்ந்து உடல் சோர்வாக இருந்தால் இரத்த புற்று நோயாக இருக்க வாய்ப்புள்ளது.

உடலில் கட்டி மற்று மச்சத்தில் மாற்றம்

உடல் தோளில் கட்டிகள் ஆங்காங்கே அடிக்கடி தோன்றினால் மருத்துவரை காண வேண்டும். ஏனென்றால் பாதாள திசுக்களில் இது புற்று நோய் உருவாக வாய்ப்புள்ளது.

அதே போல மச்சத்திலோ அல்லது மருவிலோ மாற்றம் தெரிந்தால் தோல் புற்று நோயாக இருக்க வாய்ப்புள்ளது

காயம் ஆறாமல் இருந்தால்

உடலில் ஏற்பட்ட காயம் மூன்று வாரங்களுக்கு மேல் ஆறாமல் இருந்தால் புற்று நோய் உருவாக வாய்ப்புகள் உள்ளது. மருத்துவரை அணுகுவது நலம் தரும்.

உடல் எடை குறைவு

நாம் முயற்சியே செய்யாமல் உடல் எடை அதிகமாக குறைய ஆரம்பித்தால் குடலிலோ அல்லது கல்லீரலிலோ புற்றுநோய் திசுக்கள் உருவாகியிருப்பதாக அர்த்தம்.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments