சிறுநீரக கற்கள் இருந்தால் இந்த அறிகுறிகள் கூட இருக்குமாம்

Report Print Printha in நோய்

முறையற்ற டயட் மற்றும் அதிகப்படியான உப்பு நிறைந்த உணவுகள் மற்றும் கால்சியம் நிறைந்த மாத்திரைகளை அதிகமாக எடுத்துக் கொள்வதால் சிறுநீரக கற்கள் உருவாகிறது.

அதிலும் பெண்கள் சிறுநீரக கற்கள் பிரச்சனைகள் மூலம் அதிகமாக பாதிக்கப்படுகின்றார்கள்.

சிறுநீரக கற்கள் இருந்தால் ஏற்படும் அறிகுறிகள் என்ன?

  • சிறுநீர் கழித்து 5-6 நிமிடங்கள் வரை எரிச்சலாக இருந்தால், அது சிறுநீரகக் கற்கள் இருப்பதற்கான ஒரு அறிகுறியாகும்.

  • திடீரென்று அதிகப்படியான காய்ச்சல், குமட்டல் இருந்தால் உங்கள் சிறுநீரகங்களில் கற்கள் உள்ளது என்று அர்த்தம்.

  • சிறுநீர் கழிக்கும் போது, சிறுநீர் தெளிவின்றி இருந்தால், அது சிறுநீரக கற்களுக்கான அறிகுறி மட்டுமில்லாமல் சிறுநீர் பாதையில் தொற்று இருப்பதையும் குறிக்கிறது.

  • சிறுநீர் அவசரமாக வருவதை போன்று உணர்வு அடிக்கடி ஏற்பட்டால், அது சிறுநீரக கற்கள் இருப்பதற்கான அறிகுறியாகும்.

  • சிறுநீர் கழிக்கும் போது, அத்துடன் ரத்தம் வெளியேறினால், சிறுநீரக கற்கள் சிறுநீரகங்களில் காயங்களை ஏற்படுத்தி, அதனால் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம்.

  • அடிவயிறு மற்றும் பிறப்புறுப்பைச் சுற்றி அடிக்கடி கடுமையான வலி, வழக்கத்திற்கு மாறாக பிறப்புறுப்பைச் சுற்றி மற்றும் முகத்தில் வியர்வை அதிகமாக வெளியேறினால் அது சிறுநீரக கற்கள் இருப்பதற்கான அறிகுறியாகும்.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments