இந்த அறிகுறிகளை மட்டும் அலட்சியப்படுத்தி விடாதீர்கள்.. ஆபத்து!

Report Print Printha in நோய்

உடலின் வெளிப்புறத்தில் உள்ள மாற்றங்களை எளிதில் தெரிந்துக் கொள்ளலாம். அதுவே உடலின் உட்புற மாற்றங்களை கண்டறிவது மிகவும் கடினம் அல்லவா?

அந்த வகையில் நமது உடலில் ரத்த கட்டிகள் ஏற்பட்டிருந்தால், தென்படும் அறிகுறிகளை பற்றி தெரிந்துக் கொள்வோம்.

ரத்தக் கட்டிகள் இருந்தால் ஏற்படும் அறிகுறிகள் என்ன?

  • தசைப்பிடிப்பு, கால்வலி அல்லது மென்மையான வீக்கம் இது போன்ற அறிகுறிகளை உணர்ந்தால், அது ஆழமான ரத்த உறைவின் அறிகுறிகளாகும்.

  • காலநிலையில் மாற்றம் எதுவும் இல்லாமல் அடிக்கடி இருமல், இதயம் படபடப்பு, மார்பு வலி, மூச்சு திணறல் இது போன்ற அறிகுறிகளுக்கு உடனடியாக மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்வது மிகவும் அவசியம்.

  • அதிகமான இதய துடிப்பு, மயக்கம் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டால், அது நுரையீரலில் ரத்த கட்டிகள் உள்ளது என்பதைக் குறிக்கிறது.

  • மூச்சை இழுத்து ஆழமாக விடும் போது, இதயத்தில் வலி ஏற்பட்டாலும், நுரையீரலில் ரத்த கட்டி உள்ளது என்பதற்கான அறிகுறியாகும்.

  • நமது உடலில் ரத்த கட்டிகள் இருந்தால், அது ரத்த நாள பாதையின் வெளிப்புறத்தில் சிவப்பு கோடுகள் தோன்றுவதுடன், கை மற்றும் கால்களில் சிவப்பு கோடுகளின் அறிகுறிகள் ஏற்படும்.

  • நமது உடலில் ஆழமான ரத்த உறைவு ஏற்பட்டிருந்தால், அது கை, கால்களில் வீக்கத்தை ஏற்படுத்தி, உடல் முழுவதும் ரத்த ஓட்டத்தை சீர்குலைய செய்து, முக்கியமான உடல் பாகங்களுக்கு ஆக்ஸிஜன் செல்வதை தடுக்கும்.

குறிப்பு

உடம்பில் மேல் கூறப்பட்டுள்ள ரத்தக்கட்டிக்கான அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்துக் கொள்வது மிகவும் அவசியம். இல்லையெனில் அந்த அறிகுறிகள் உயிருக்கு ஆபத்தாகிவிடும்.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments