பச்சை நிறத்தில் வாந்தி ஏற்பட என்ன காரணம்?

Report Print Printha in நோய்

பொதுவாக நமது உடலில் ஏதேனும் ஒவ்வாமை அல்லது விஷத்தன்மை இருந்தால், அது உடனே நமது குடல் மூலமாக வெளியே தள்ளப்படும்.

இதனால் நமக்கு வாந்தி, பேதி போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றது.

ஆனால் வாந்தி எடுக்கும் போது, பச்சை நிறத்தில் இருந்தால், அது தீவிரமான பாதிப்பின் அறிகுறியாக இருக்க கூட அதிக வாய்ப்புகள் உள்ளது.

பச்சை நிறத்தில் எடுக்கும் வாந்திக்கு காரணம் என்ன?
  • நம்முடைய கல்லீரலில் தொற்றுக்களின் தாக்கம் ஏற்பட்டிருந்தால், அது வயிறு மற்றும் பைல் சுரக்கும் அமிலங்கள் அனைத்திலும் கலந்து பச்சை நிறமாகிறது. இதனால் வாந்தி பச்சை நிறத்தில் ஏற்படுகிறது.
  • நாம் சாப்பிட்ட உணவுகள் ஜீரணம் அடையாத போது, அவை விஷத் தன்மையாக மாறிவிடுகிறது. இதனால் அந்த உணவுத் துகள் முழுவதும் வாந்தி வழியாக வெளியேறும் போது, அது பச்சை நிறத்தில் இருக்கிறது.
  • நாம் சாப்பிடும் சில மருந்துக்களின் வீரியம் அல்லது ஒவ்வாமை போன்ற பிரச்சனைகள் மூலம் பச்சை நிறத்தில் வாந்தி ஏற்படுகிறது.
  • மது சாப்பிட்டதும் சில வகை உணவுகளை சாப்பிடுவதால், அது ஜீரண மண்டலத்தை முழுவதும் பாதிக்கிறது. எனவே ஜீரண மண்டலத்தின் செயல்பாட்டைக் கெடுக்கும் விதமாக அமைவதால், பச்சை நிறத்தில் வாந்தி ஏற்படுகிறது.
  • சிலருக்கு சப்பாத்தி, பால், கடலை போன்ற உணவுகள் உடலுக்கு ஒத்துக் கொள்ளாத நேரத்தில் பச்சை நிறத்தில் வாந்தி ஏற்படுகிறது.
  • இரவில் தூக்கம் இல்லாமல், அதிக மன அழுத்தத்தில் இருப்பவர்களுக்கு கூட பச்சை நிறத்தில் வாந்தி ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments