5 ஆயிரம் பேரை பலிவாங்கிய எபோலா வைரசுக்கு மருந்து கண்டுபிடிப்பு

Report Print Santhan in நோய்
278Shares

ஆப்பிரிக்க நாடுகளை அச்சுறுத்தி வந்த எபோலா வைரசிற்கு எதிராக தடுப்பு மருந்து சோதனை வெற்றிகரமாக அமைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆப்பிரிக்காவின் முக்கிய பகுதிகளான கினியா, லைபீரியா, சியாரா லியோன், நைஜீரியா, மாலி ஆகிய நாடுகளில் எபோலா நோய் பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு உலக சுகாதார அமைப்பு கடுமையாக போராடி வருகிறது.

இதுவரை இந்த நோய் பாதிப்பால் 5,160 பேர் பலியாகிருப்பதாக கூறப்படுகிறது.

குறிப்பாக லைபிரீயா நாட்டில்தான் இந்த நோயின் தாக்குதல் அதிகமாக உள்ளது என்றும் அங்கு மட்டும் இதுவரை 2,830 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

கினியா நாட்டில் 1100 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மாலி நாட்டில் இந்த நோயின் தாக்குதல் இப்போது தான் துவங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தற்போது இந்த நாடுகளில் 14,000 பேர் எபோலோ நோய் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளதாக கூறப்படுகிறது. அவர்களை காப்பாற்றுவதற்கு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த உயிர்க்கொல்லி நோயில் இருந்து மனித இனத்தை பாதுகாக்க உலக சுகாதார அமைப்பின் வலியுறுத்தலின் பேரில் கினியா நாட்டு அரசு மற்றும் உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள தொண்டு நிறுவனங்கள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தன.

கினியா நாட்டில் உள்ள பாஸ்ஸி குய்னீ என்ற கடலோரப் பிரதேசத்தில் நடைபெற்றுவந்த நீண்டகால ஆராய்ச்சியின் பயனாக சின்னம்மை நோய்க்கு போடப்படும் வட்டவடிவ தடுப்பூசி முறை கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த தடுப்பூசிகளை போட்டுக் கொண்டவர்களை அடுத்த அரை மணி நேரத்தில் இருந்து சுமார் 12 வாரகாலம் வரை தொடர்ந்து மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். முதலில் 18 வயது நிரம்பியவர்களுக்கு மட்டும் இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டது.

பின்னாளில், ஆறுவயதை கடந்த குழந்தைகளுக்கும் இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டது, பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் சரிபாதி பேருக்கு ஆரம்ப காலத்தில் சற்று தலைவலி, தசைவலி போன்ற உபாதைகள் தோன்றின. எனினும், அந்த வலி எல்லாம் விரைவில் தீர்ந்தும் போனதாக கூறப்படுகிறது.

எனவே, இந்த தடுப்பூசி கண்டுபிடிப்பு வெற்றிகரமாக அமைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments