ட்ரக்கியோஸ்டோமி என்றால் என்ன? அது யாருக்கு எதனால் ஏற்படுகிறது?

Report Print Printha in நோய்

ட்ரக்கியோஸ்டோமி (Tracheostomy) என்பது ஒரு வகை அறுவை சிகிச்சை முறையாகும். நமது மூச்சுக்குழலில் அல்லது நுரையீரலில் தொற்று ஏற்படும் போது, சுவாசிக்க முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.

எனவே நாம் சுவாசிக்கும் சூழலை ஏற்படுத்த நமது தொண்டைக்கு கீழ் கழுத்துப் பகுதியில் சிறிது துளையிட்டு ஒரு செயற்கைக் குழாய் மூலம் நமது உடல் உறுப்புகள் இயங்குவதற்கு தேவையான ஆக்சிஜன் செலுத்தப்படும், இதை தான் ட்ரக்கியோஸ்டோமி என்கிறோம்.

ட்ரக்கியோஸ்டோமி எதனால் யாருக்கு ஏற்படுகிறது?

பொதுவாக ஒருவருக்கு சுவாசக் கோளாறு பிரச்னை, ஒவ்வாமையின் காரணமாக ஏற்படுகிறது.

ஒவ்வாமை ஏற்பட்டால் அது நமக்கு தோல் மற்றும் நுரையீரலைப் பாதிக்கிறது.

ஆனால் சிலர் இம்யூனோமாடுலேட்டர் மருந்துகளை சாப்பிடுவதால், அவர்களுக்கு அலர்ஜி, வீக்கம், ஒவ்வாமை போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு சுவாசக் கோளாறு ஏற்பட காரணமாக இருக்கிறது.

இம்யூனோமாடுலேட்டர் மருந்துகள் எதற்காக பயன்படுத்தப் படுகிறது?

கால்சி நியூரின் (Calcineurin), ஆன்டிமெட்டாபாலிட்ஸ்(Antimetabolites), ஆல்கைலேடிங்(Alkylating), ஸ்டெராய்டுகள் (Steroids), அனபோலிக் ஸ்டெராய்டுகள் (Anabolic Steroids), மெத்தோட்ரெக்ஸேட் (Methotrexate), இம்யூனோக்ளோபுலின் ஏ (Immunoglobulin A) , இம்யூனோக்ளோபுலின் ஜி (Immunoglobulin G) போன்ற அனைத்தையும் இம்யூனோமாடுலேட்டர் மருந்து வகையைச் சேர்ந்தது ஆகும்.

இம்யூனோமாடுலேட்டர் போன்ற இந்த மாதிரியான மருந்து வகைகள் நமது உடலின் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிப்பதற்காக மருத்துவர்கள் மூலம் பரிந்துரைக்கப்படுகிறது.

இம்யூனோமாடுலேட்டர்கள் மருந்துகள் நமது உடம்பின் நோய் எதிர்ப்பு மண்டலத்தைச் சீர்படுத்தி, எதிர்ப்பு மண்டலத்தைக் கட்டுப்படுத்துகிறது.

இந்த மருந்துகள், நம்மை சுறுசுறுப்பாகவும், இளமையாகவும் வைத்திருக்க உதவுகின்றன.

மேலும், இம்யூனோமாடுலேட்டர் மருந்துகள் புற்றுநோய் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் போது, அவர்களின் உடலுக்குப் புத்துணர்வு அளிப்பதற்காகவும், புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

இதனால் தான் இம்யூனோமாடுலேட்டர் மருந்துகளைப் பெரும் பதவியில் இருப்பவர்கள், திரைத்துறையினர், விளையாட்டுத் துறையில் உள்ளவர்கள் அதிகப் புத்துணர்வு பெறுவதற்காக எடுத்துக்கொள்கின்றனர்.

இம்யூனோமாடுலேட்டர் மருந்துகளை சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள்
  • சுவாசப் பையைப் பாதித்து சுவாசக் கோளாறு பிரச்சனைகள் ஏற்படுகிறது.
  • நமது உடலின் நோயெதிர்ப்பு சக்திகள் குறைகிறது.
  • நோயெதிர்ப்பு சக்திகள் குறைவதால், பலவித நோய்த் தொற்றுக்கள் ஏற்படுகிறது.
  • நமது உடம்பில் ஒவ்வாமை போன்ற பிரச்சனையை அதிகரிக்கச் செய்கிறது.
  • கடுமையான காய்ச்சல் போன்ற பிரச்சனை ஏற்படுத்துகிறது.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments