பல நாடுகளில் குறைவடைந்துவரும் மார்பகப் புற்றுநோய்

Report Print Givitharan Givitharan in நோய்

கடந்த 25 வருடங்களாக மார்பகப் புற்றுநோய்க்கு எதிரான சிகிச்சை முறைகளில் மாற்றம் கொண்டு வரப்பட்ட வண்ணம் உள்ளன.

தற்போதைய பகுப்பாய்வு ஒன்று பரிசீலிக்கப்பட்ட 47 நாடுகளில் இம் மார்ப்பகப் புற்றுநோய்களால் உண்டாகும் மரணங்கள் வீழ்ச்சியடைந்துள்ளதாக சொல்லுகின்றது.

இந்த பகுப்பாய்வு முடிவுகள் இவ்வாண்டு அமெரிக்காவில் இடம்பெற்ற மார்ப்பகப் புற்றுநோய் தொடர்பான கருத்தரங்கொன்றில் வெளியிடப்பட்டுள்ளது.

மார்பகப் புற்றுநோயானது விருத்தியடைந்த, விருத்தியடந்துவரும் நாடுகளிலுள்ள பெண்களில் ஏற்படக்கூடிய பொதுவான புற்றுநோயாகும்.

இது பெண்களில் ஏற்படும் புற்றுநோய்களில் 1/4 மடங்கு என கூறப்படுகின்றது.

தற்போது இம் மார்ப்பகப்புற்று நோய் தாக்கம் பரிசீலிக்கப்பட்ட 47 நாடுகளில் 39 நாடுகளில் குறைவடைந்துள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.

மேலும் இதில் ஐக்கிய ராச்சியம், ஐரோப்பா மற்றும் பல விருத்தியடைந்த நாடுகள் உள்ளடங்கும்.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments