தொற்றுக்குள்ளாகக் கூடிய நுண்ணுயிர் சமுதாயத்தை பாதிப்படையச் செய்யும் புரத மூலக்கூறு

Report Print Givitharan Givitharan in நோய்

பல தொற்றுக்குள்ளாகும் நோய்க்கிருமிகளை சிகிச்சையளிப்பது கடினமான விடயம், ஏனெனில் அவை விரைவாக இனம்பெருகி தம்மைச் சூழ பாதுகாப்பு இழையங்களை தோற்றுவிக்கின்றன. இவை இயல்பாகவே நுண்ணுயிர் எதிரிகளுக்கு எதிர்ப்பைக் காட்டுகின்றன.

தற்போது Caltech ஆய்வாளர்கள், Oxford பல்கலைக்கழகத்துடன் இணைந்து மேற்படி நுண்ணுயிர்களுக்கு எதிராக போராடுவதில் முன்னேற்றம் கண்டுள்ளனர்.

இவர்களால் இனங்காணப்பட்ட புரதம், cystic fibrosis இன் முதன்மை கிருமியான Pseudomonas aeruginosa நுண்ணுயிர்களை தடுத்து, அழிக்கிறது.

Pseudomonas aeruginosa ஆனது அதன் நீண்டகால தாக்கத்தின் விளைவாக எரி காயங்கள், நீரிழிவு, குடல் புண்கள் போன்ற சிகிச்சையளிப்பதற்கு கடினமான நோய் நிலைமைகளை தோற்றுவிக்கின்றது.

இவை உயிர்த்திரைகளாக வளர்ச்சியடைவதால் இவைக்கெதிராக சிகிச்சையளிப்பது கடினம். இவை பாரம்பரிய நுண்ணுயிர் எதிரிகளுக்கு தடுப்புடையன. ஆனால் தற்போதைய ஆய்வு இவைகளின் வளர்ச்சியைத் தடுக்கும் புது வழிமுறையைக் கண்டுபிடித்துள்ளது.

P. aeruginosa இனமானது pyocyanin எனும் சிறிய மூலக்கூறுகளை தோற்றுவிக்கின்றன. இவை நீல சாயங்களை கொண்டவை.

இந்த pyocyanin இனைக் கொண்டு இவ்வகை இனங்கள் அறியப்படுகின்றன. அத்தோடு இவை இவ் அங்கிகளின் வளர்ச்சியையும் தூண்டுகின்றன.

முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்று இம் மூலக்கூறுகளை அழிப்பதன் மூலம், மேற்படி நுண்ணுயிர்களை அழிக்க முடியும் என வெளிப்படுத்தியிருந்தது.

மண்ணிலிருந்து சேகரிக்கப்பட்ட Mycobacterium fortuitum ஆனது, முன்னர் அறியப்பட்டிராத pyocyanin demethylase (PodA) எனும் புரத மூலக்கூறுகளை உருவாக்குவதை தற்போதைய ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர்.

இப்புரத மூலக்கூறுகள் P. aeruginosa இனங்களின் வளர்ச்சியை தடுத்து, அழிப்பது மேற்படி ஆய்வின் மூலம் வெளிக்கொணரப்பட்டிருக்கிறது.

மேலும் இவர்களது ஆய்வு Journal Science பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments