மாரடைப்பு பிரச்சனைக்கு இதோ ஒரு சூப்பரான தீர்வு

Report Print Givitharan Givitharan in நோய்

மனிதர்களில் ஏற்படும் நோய்களில் உயிரைப் பறிக்கும் நோயாகவும், உறுதியான உயிர்காக்கும் உத்தரவாதத்துடன் சிகிச்சை அளிக்க முடியாததுமான நோய்களுள் மாரடைப்பும் ஒன்றாகும்.

எனினும் இந்த நோய் ஏற்படுவதற்கான சாத்தியத்தை குறைக்கும் வழிமுறைகள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இவற்றின் வரிசையில் தற்போது ஸ்டிக்கர் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்டிக்கரானது இதயத்தினுள் வைக்கப்படக்கூடியதாக இருப்பதுடன், அங்கிருந்து மின் தூண்டுதலின் ஊடாக இதயத்துடிப்பினை சீர்செய்யக்கூடியதாக காணப்படுகின்றது.

பொலிமர் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த ஸ்டிக்கர் மிகவும் நீட்சியடையக்கூடியதாகவும், மீள் தன்மை கொண்டதாகவும் இருக்கின்றது.

இதனை லண்டனிலுள்ள இம்பீரியல் கல்லூரி (Imperial College) மற்றும் அவுஸ்திரேலியாவிலுள்ள நியூசவுத் வேல்ஸ் கல்விப் அறிவியல் (New South Wales (UNSW) Faculty of Science) பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து உருவாக்கியுள்ளனர்.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments