Heart Attack- Cardiac Arrest: இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்ன?

Report Print Peterson Peterson in நோய்

பொதுமக்கள் மத்தியில் இன்றளவும் மாரடைப்பு(Heart Attack) என்பதும் இதயநிறுத்தம் என்பதும் ஒரே நோயின் அறிகுறிகள் என எண்ணி வருகின்றனர்.

ஆனால், உண்மையில் இரண்டிற்கும் மிக முக்கிய வேறுபாடுகள் உள்ளன.

ஒருவரின் இதய தசைகளுக்கு செல்லும் ரத்த ஓட்டமானது திடீரென தடைப்பட்டால் ஏற்படுவது மாரடைப்பு. ஆனால், இந்த சூழ்நிலையிலும் மற்றப்பகுதிகளுக்கு இதயம் ரத்தத்தை அனுப்பிக்கொண்டு இருக்கும்.

இந்த நிலையில் நோயாளியால் சுவாசிக்க முடியும். சுயநினைவிலும் இருக்க முடியும்.

மாரடைப்பு ஏற்பட்டு அதற்கு உடனடி சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால், இதன் அடுத்தக்கட்டமாக ரத்தத்தை செலுத்தும் பணியை இதயம் நிறுத்தி விடும். இதற்கு பெயர் தான் இதயநிறுத்தம்(Cardiac Arrest).

இந்த நிலையில் நோயாளியால் இயற்கையாக சுவாசிக்கவும் சுயநினைவுடன் இருக்கவும் முடியாது.

ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உடனடி சிகிச்சை அளிக்காவிட்டால் அவருக்கு அடுத்த சில நிமிடங்களில் இதய நிறுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது.

’Heart Attack - Cardiac Arrest: இவ்விரண்டையும் குணப்படுத்த முடியுமா?

மாரடைப்பு மற்றும் இதயநிறுத்தம் என இரண்டுமே ஆபத்தான நிலையாகவே பார்க்கப்படுகிறது.

மாரடைப்பு ஏற்பட்ட நபருக்கு உடனடி சிகிச்சை அளித்து அவருக்கு இதயநிறுத்தம் ஏற்படாமல் தடுத்துவிட்டால் அவரை காப்பாற்றும் வாய்ப்புள்ளது.

அதேசமயம், இதய நிறுத்தம் ஏற்பட்ட நபருக்கு உடனடியாக CPR சிகிச்சை அளித்து சுவாசத்தையும், சுயநினைவையும் திரும்ப பெற்றால் அவரையும் குணப்படுத்த வாய்ப்புள்ளது.

ஆனாலும், இச்சிகிச்சை முறைகள் எல்லா நேரங்களிலும் 100 சதவிகிதம் பலனளிக்காத சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன என்பது கவலைக்குறிய செய்தியாகும்.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments