புற்றுநோயின் பயங்கரமான பன்முகத்தன்மை - மயங்குகிறது மருத்துவத்துறை

Report Print Maru Maru in நோய்
புற்றுநோயின் பயங்கரமான பன்முகத்தன்மை - மயங்குகிறது மருத்துவத்துறை
756Shares

உடலில் ஏற்படும் சில கட்டிகளின் உள்ளே இருக்கும் செல்களே புற்றுநோய் செல்களாக மாறுகின்றன. இது விலங்குகளை காடுகளில் கண்டுபிடிப்பது போன்ற ஒரு செயல். இதை ஆரம்பத்திலே கண்டுபிடித்துவிட்டால் அவைகளை பின்பற்றி அழித்து, பரவாமல் தடுத்துவிட முடியும்.

புற்றுநோய் பற்றி சில கேள்விகளும் பதில்களும்,

புற்றுநோயோடு போராடுபவர்கள் எல்லோரையும் எந்த நிலையிலும் காப்பாற்ற முடியுமா?

பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் வாழ்நாள் புற்றுநோயாளிகளாக நீண்ட நாட்கள் இருக்கிறார்கள். இதுவே மருத்துவத்துறை சாதனையில் ஒரு மைல்கல்தான். சமீபத்தில் அமெரிக்கன் புற்றுநோய் சொசைட்டி வெளியிட்ட ஒரு புள்ளிவிவர கணக்குப்படி, அமெரிக்காவில் புற்றுநோயின் கடுமையான பாதிப்பில் இருப்பவர்கள் ஆண்களில் 42% பெண்களில் 38% ஆகும்.

பிரிட்டனில் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. ஆண்களில் 54%, பெண்களில் 48% புற்றுநோயில் குணப்படுத்தும் நிலையை கடந்து இருக்கிறார்கள். இது மேலும் உயர்ந்து வருவதுதான் அச்சுறுத்தல். மேக்மில்லன் புற்றுநோய் ஆதரவு (Macmillan cancer Support) நிறுவன கணக்குப்படி, 2015 ம் ஆண்டில் 25 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். ஒவ்வொரு ஆண்டும் 3% பேர் கூடுகின்றனர் என்றும், 5 ஆண்டுகளில் 4 லட்சம் நோயாளிகள் அதிகரித்துள்ளனர் என்றும், கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புற்றுநோய் இப்போது அதிகமானவர்களிடம் இருக்கிறது. அதனால், அதுவும் பொதுவான நோய்களில் ஒன்றாகிவிட்டாலும் பலர் ஏன் இன்னும் ஆபத்தான நிலையை அடைகிறார்கள் ?

புற்றுநோய் மிகக்கொடியதாகவும் மிகஅரிதாகவும் முன்பு இருந்தது. இப்போது அதிகமானவர்களிடம் இருப்பதாலும், சகஜமாகிவிட்டதாலும் கொடிய நோயான அதன் தீங்கு குறையப்போவதில்லை.

புற்றுநோய் முன்னோர்களுக்கு இருந்தால் மரபுவழி பரிணாமங்களால் துரதிஷ்டவசமாக சந்ததிகளுக்கும் ஏற்படுகிறது. யாருக்கும் ஏற்படாது என்று உத்தரவாதமில்லை. அதற்கு, சமுதாயத்தில் நிறைய சுகாதார குறைபாடுகள் நவீன வாழ்க்கைமுறையில் கலந்துவிட்டதுதான். மனிதனை போன்ற பெரிய விலங்குகளுக்கும் சுகாதார கேடு அடிப்படையில் இந்த நோய் ஏற்படுகிறது. இது உடனடியாக கவனிக்கப்பட்டு சிலருக்கு குணப்படுத்தப்பட்டாலும். புற்றுநோய் ஏற்படுகிற உறுப்புகளை பொறுத்தும் அதை குணப்படுத்துவதில் சிக்கல் ஏற்படுகிறது. அதன் கட்டிகள் உடைந்து இரத்தத்தில் பரவிவிடும் அபாய நிலையால் குணப்படுத்த முடியாத கெடுபிடி நிலைக்கு போகிறது.

புற்றுநோயை குணப்படுத்த நவீன வாழ்க்கை முறையில் கலந்திருக்கும் காரணங்களை ஆராய்ந்து அவைகளை குறைத்து, நோய் ஏற்படாமல் தடுப்பதுதான் இந்த சமுதாயத்தை காப்பாற்றும் சரியான முன்னெச்சரிக்கை ஆகும். அதைவிடுத்து, நோய் வந்த பிறகு, சிகிச்சைகளில் சந்திக்கலாம் என்ற நிலை விபரீதமானது. அதுவும் நாளுக்குநாள் நோயாளிகளின் எண்ணிக்கை பெருகுவதால் மருத்துவமும் திணறுகிறது.

புற்றுநோயும் செல்பிரிதலும்

புற்றுநோய் செல்கள், மற்றும் உடல்செல்கள் பின்பற்றும் செல்பிரிதல் கட்டுப்பாடுகளின் மரபை உடைத்தெறிகின்றன. நம் உடலில் புற்றுநோய் செல்கள் இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்க மீண்டும் உடலில் சீராக செல்பிரிதல் நடக்கிறதா என்பதை கொண்டே முடிவு செய்யலாம். பிரிட்டனின் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக உயிரியல் ஆராய்ச்சியாளர் த்ரிமோதி வெய்ல் இதுபற்றி கூறுவது.

கருவிலே ஒரு அண்ட செல்லை துளைத்து ஒரு விந்துசெல் நுழைந்த சில நாட்களிலே அந்த இரண்டு செல்கள் பிரிவடைந்து நூற்றுக்கணக்கான செல்களாக ஒரு பந்துபோல மாறும். இந்த செல்பிரிதல்தான் 18 வயதில் ட்ரில்லியன் கணக்கில் குவிந்து வளர்ச்சி என்ற பெரிய தோற்றத்தை கொடுக்கிறது. அதில் ஆரம்பசெல்கள் இருப்பதில்லை. எனினும் செல்பிரிதல்தான் மனித, விலங்கு, தாவர வளர்ச்சிகளின் அடிப்படை.

பக்கத்தில் இருக்கும் செல்லைவிட ஒரு செல் வேகமாக பிரிந்தால் அதற்கு ஊட்டச்சத்து விரைவாக கிடைக்கிறது என அர்த்தம். கைகளில் இருந்து விரல்கள் உருவாவது போன்ற உருவ அமைப்பை சரிசெய்ய ‘செல் தற்கொலை’ என்ற ’அபோப்டோசிஸ்’ என்ற முறையும் இந்த செல் பிரிதலில் ஒரு பிரிவாக நடக்கிறது. இது உடலில் ஒரு சிறந்த விதிமுறை கட்டுப்பாட்டோடு நடக்கிறது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட செல்களிலும் இதுபோல பிரிதல் நடக்கின்றன. அவற்றில் விதிமுறை கட்டுப்பாடுகள் அறவே இருப்பதில்லை. அதுவே உடல் அமைப்பை சீரழிக்கிறது.

ஆதிக்கமான புற்றுநோய் செல்கள்

புற்றுநோய் செல்களில் சில இருந்தாலும் சீக்கிரத்திலே எண்ணிக்கையில் அதிகரித்து மீண்டும் கட்டிகளை உருவாக்கிவிடும். ஒரு கட்டியில் பத்து புற்றுநோய் செல்கள் இருந்தாலும் வெகுவிரைவிலே 10 ஆயிரமாக பெருகுகின்றன. இதற்கிடையில் அந்த கட்டியில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட நல்ல செல்களும் இருக்கும். ஆனாலும், புற்றுநோயின் தாக்கத்தையே அது பிரதிபலிக்கிறது. புற்றுநோய் செல் ஒன்றிலிருந்து பிரிகிற இன்னொரு செல் முன்னதைப் போலவே இருப்பதில்லை. மேலும், முன்னதன் நடவடிக்கைகளையும் பாதிக்கின்றன.

சார்லஸ் டார்வின் 1859 ல் கூறிய இயற்கையின் பரிணாம வளர்ச்சி கோட்பாட்டின் படி ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, ஒரு இனத்திலிருந்து அதற்கு தொடர்பு இல்லாத புதிய உயிரி தோன்றுகிறது.

மனிதன், சிங்கம், தவளை, பாக்டீரியா உட்பட அனைத்து உயிர்களும் ஒன்றிலிருந்து மற்றொன்று தோன்றிய பரிணாம தொடர்பு உள்ளவையே என்று சார்லஸ் டார்வின் 1859 ல் கூறிய சித்தாந்தம் அப்படியே புற்றுநோய் செல்களில் தீவிரமாக பிரதிபலிக்கிறது. உடனடி மாற்றங்களினால் எளிதாக அதை உணர முடிகிறது. ஆனால், இயற்கை விதியைபோல அவைகள் ஒரு நேர்க்கோடாக பரவுவதில்லை, மரங்களில் இருந்து கிளைகள் ஒழுங்கற்று பிரிவதுபோல பரவுகின்றன. இதனால், பன்முகத்தன்மை அடைகிறது, அதனுடைய எண்ணிக்கை பெருகுகிறது, எளிதில் அழிக்க முடியாநிலையை உறுதிபடுத்துகிறது. மருத்துவரின் கவனத்திற்கே சதிசெய்கிறது என்கிறார் ஸ்வாண்டன்.

புற்றுநோய் கிருமிகளுக்குள் போர் சிகிச்சை

பன்முகத்தன்மை கொண்ட புற்றுசெல்களில் மருந்தை எதிர்ப்பை முறியடிப்பதும் இருக்கின்றன. இவை மிகவும் ஆபத்தானவை. இத்தாலியில் டுரின் பல்கலைக்கழகத்தின் புற்றுநோய் ஆராய்ச்சியாளர் ஆல்பர்டோ பார்டெல்லி, பரிணாமக் கோட்பாடு கொள்கையை பயன்படுத்தி, மருந்து எதிர்ப்பை முறியடிக்கும் புற்றுசெல்களுக்கு ஒரு சாத்தியமான தீர்வை பெற முயன்றார்.

அது ஏமாற்றம் அளித்தது, எல்லா கட்டிகளிலும் எதிர்ப்பு இருந்தது, அதனால், புதிய புற்றுநோய் எதிர்ப்பு சிகிச்சையை உருவாக்கி வருகிறார்.

ஒரு புற்று கட்டியில் உள்ள செல்கள் ஒரே மாதிரியானவை அல்ல. வேறுவிதமான செல்கள் நுழைந்தால் அவைகளுக்குள் யுத்தம் நிச்சயம். மருந்தை எதிர்க்கும் புற்றுநோய் கட்டியின் செல்களை ’உருவங்கள்’(Clones) என்று அழைக்கப்படுகிறது. புற்றுநோயாளிக்கு மருந்தாக இன்னொரு வகை புற்று செல்களை அதே கட்டிக்குள் செலுத்தப்படுகிறது. புதிதாக அங்கு உருவாக்கப்பட்ட புற்று செல்களின் ஆதிக்கம் தலைவிரித்தாடும் அதனால், பழைய புற்றுசெல்களான ’க்ளோன்’ களுக்கும் புதிதாக வளர்ந்த ‘க்ளோன்’ களுக்கும் இடையே போர் நடைபெறும் புதிய புற்றுசெல்களின் அதிக எண்ணிக்கையாலும் சக்தியாலும் பழைய ’க்ளோன்’ கள் அழிக்கப்பட்டுவிடும். புதிய புற்றுசெல்கள் மருந்தால் அழியக்கூடியவை என்பதால், மறையத் துவங்குகின்றன.

இந்த ஆய்வு வெற்றியாகுமா? தோல்வியடையுமா? என்பது இப்போது சொல்ல முடியாது. அவருடைய குழு 2016 கோடையில்தான் பரிசோதனை பார்க்கிறது.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments