தோல்களில் ஏற்படும் சிரங்கு போன்றவற்றினை முற்றாக நீக்க புதிய மருந்து கண்டுபிடிப்பு

Report Print Givitharan Givitharan in நோய்
தோல்களில் ஏற்படும் சிரங்கு போன்றவற்றினை முற்றாக நீக்க புதிய மருந்து கண்டுபிடிப்பு

மனித தோலிலே சிரங்கு, தடித்தல், அழற்சி போன்ற பல்வேறு நோய்கள் ஏற்படக்கூடிய சாத்தியங்கள் அதிகளவில் காணப்படுகின்றன.

இவ்வாறான நோய்களால் அதிகளவில் சிரமங்கள், சங்கடங்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும்.

அதிலும் அழற்சி போன்ற காரணங்களால் தோலில் ஏற்படும் தடித்தலுக்கு முறையான மருத்துவம் இதுவரை காலமும் இல்லாமலே இருந்தது.

இதற்காக சில உணவுக் கட்டுப்பாடுகள் மட்டுமே இருந்தன.

ஆனால் தற்போது இதற்கு சிறந்த நிவாரணம் தரக்கூடிய மாத்திரையினை அமெரிக்க விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர்.

இதன் ஊடாக உலக சனத்தொகையில் இந் நோயுடன் வாழும் மூன்று சதவீதத்தினருக்கும் விடிவு காலம் பிறந்துள்ளதாக விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

தற்போது இம் மாத்திரைக்கு அமெரிக்காவின் Food and Drug Administration (FDA) நிறுவனத்தில் அனுமதி பெறப்படவுள்ள நிலையில் விரைவில் பாவனைக்கு விடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments