ஈழத்து கலைஞரின் இயக்குதலில் தமிழீழ கனவு நிஐமாகின்றது !!

Report Print Akaran Akaran in புலம்பெயர்

புலம்பெயர் தேசங்களில் உள்ள தமிழ் மக்கள், தாயகத்து தமிழ் மக்கள் மற்றும் தமிழகத்து மக்கள் அனைவரினதும் தமிழீழ கனவை நிஐமாக்கி காட்சியாக்கப்பட்ட கூட்டாளி எனும் தமிழ் தாயக திரைப்படம் ஒவ்வொரு தமிழனின் கனவை நிஐமாக்கும் வகையில் தத்ருபமாக அமைக்கப்பட்ட காட்சிகள் நிரம்பிய திரைப்படமாகும்.

ஈழத்து கலைஞர் இயக்குனர் நிரோஐனின் தயாரிப்பில் உருவான கூட்டாளி எனும் தாயகத்து செய்திகளை கூறும் தமிழ் திரைப்படம் சுவிற்சர்லாந்து மற்றும் நோர்வே மண்ணில் திரையிடப்பட்டு தமிழ் மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தொடர்ந்து எதிர்வரும் டென்மார்க்கில் 14, 15 மற்றும் 22ம் திகதியும் சுவிட்சர்லாந்தில் 16, 23 திகதியும் நோர்வேயில் 16ம் திகதியும் திரையிடப்படுகிறது.

தாயக செய்திகளை கண்ணெதிரில் காட்டும் இந்த திரைப்படம் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கூட்டாளி திரைப்படம் எதிர்வரும் மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமை அமர்வில் திரையிடப்படுவதற்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் புலம்பெயர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments