மட்டக்களப்பு நகரை அழகுபடுத்தும் நோக்கோடு மரங்களை நடும் வேலைத்திட்டம்

Report Print Dias Dias in அபிவிருத்தி

மட்டக்களப்பு மாநகரசபையின் நகரை அழகுபடுத்தல் செயற்றிட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும், மரம் நடுகை நிகழ்வானது இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக மட்டக்களப்பு - திருமலை வீதியை அழகுபடுத்தும் நோக்கில் 1000 மரங்களை நடும் வேலைத்திட்டம் இன்று மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இந்த திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் மாநகர ஆணையாளர் க.சித்திரவேல், பிரதி ஆணையாளர் நா.தனஞ்ஜெயன், மாநகரசபை உறுப்பினர்களான ரூபராஜ், அசோக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் அபிவிருத்தி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers