கடந்த நான்கு ஆண்டுகளில் இலங்கைக்கு இந்தியா வழங்கிய நிதி எவ்வளவு தெரியுமா?

Report Print Murali Murali in அபிவிருத்தி

கடந்த நான்கு ஆண்டுகளில் இந்திய அரசாங்கம் இலங்கையின் அபிவிருத்திக்கு உதவியாக 1080.55 (இந்திய ரூபாய்) கோடி ரூபாயினை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வெளிவிவகார இணை அமைச்சர் வி.கே.சிங் இதனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இது குறித்து நேற்று ராஜ்ய சபாவில் எழுத்து மூல அறிக்கை ஒன்றையும் அவர் தாக்கல் செய்துள்ளார்.

இதன்படி, கடந்த நான்கு ஆண்டுகளில் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், நேபாளம், மாலைதீவு, இலங்கை ஆகிய நாடுகளுக்கு, 21,100 கோடி ரூபா அபிவிருத்தி நிதியாக வழங்கப்பட்டுள்ளது.

இதில் இலங்கைக்கு மாத்திரம் அபிவிருத்திக்கு உதவியாக 1080.55 (இந்திய ரூபாய்) கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், பூட்டானுக்கு, 15,680.97 கோடி ரூபாவும், ஆப்கானிஸ்தானுக்கு, 2,232.94 கோடி ரூபாவும் வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, நேபாளத்துக்கு 1,322.54 கோடி ரூபாவும், பங்களாதேசுக்கு, 514.13 கோடி ரூபாவும், மாலைதீவுக்கு, 270.39 கோடி ரூபாவும், அபிவிருத்தி உதவியாக வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் அபிவிருத்தி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்