பெண்களே உங்கள் காதலருக்கு என்ன பரிசு வழங்க போகிறீர்கள்? நெருக்கம் அதிகரிக்க இதில் ஒன்றை தேர்வு செய்யுங்கள்

Report Print Abisha in டேட்டிங்

பெப்ரவரி 14ஆம் திகதி காதலர் தினம் கொண்டாடப்படும். இதில் காதலர்கள் தங்களுக்குள் பரிசுகளை பரிமாறிக்கொள்வர்.

அவ்வாறு பரிசுகள் பரிமாறும்போது ஆண் பெண் இருவருக்கும் சில சந்தேகங்கள் எழும்

அவ்வாறு சிந்திப்பவர்களுக்கு தங்கள் காதலருக்கும் வழங்க வேண்டிய சிறப்பான 5 பொருட்கள் பற்றி பார்க்கலாம்

இது பெண்கள் ஆண்களுக்கு வழங்க வேண்டியது

1. உங்களுக்கு பிடித்த டியோடரண்ட்

நீங்கள் அவருடன் இருப்பதால், அவருக்கு ஏற்கனவே பிடித்த வகை டியோடரண்ட்டுகளைத் தேர்ந்தெடுக்கலாம். இந்த காதலர் தினத்தன்று அவரை மணக்கச் செய்திடுங்கள்.

2. டெடி பியர் ஜோடிகள்

உங்கள் காதலனுக்கு கொடுக்க இது ஒரு சிறந்த காதல் பரிசாக திகழும். உங்களுக்கு பிடித்த டெடி பியர்களை வாங்கி, அதனை உங்கள் வீட்டு காதல் நாற்காலியில் உங்களுக்கு பிடித்த தோரணையில் வைத்திடுங்கள். இது உங்களையும் அவரையும் நெருங்கிட செய்யும்.

3. இரண்டு பேரும் செல்வதற்கான எதிர்பாரா டின்னர்

உங்கள் இருவரின் வாழ்க்கையிலும் முக்கிய அர்த்தத்தை அளித்திடும் வேகமான மற்றும் எளிமையான பரிசு தான் எதிர்பாரா டின்னர். நீங்கள் இருவரும் முதல் முறை டேட்டிங் சென்றதை போல், மீண்டும் ஒரு முறை, காதல் உணர்வுமிக்க சூழ்நிலையில், அதே உணவுகளுடனான டின்னருக்கு சென்றால், அவர் மீது உங்களுக்கு இன்னமும் அதே அளவு காதல் இருக்கிறது என்பதை அவர் புரிந்து கொள்வார். அவருக்கு பிடித்தமான உடை அணிந்து செல்வது இன்னும் நெருக்கமாக உணர செய்யும்.

4. கைக்கடிகாரம்

உங்கள் காதலனுக்கு காதலர் தினத்தன்று அளிக்க வேண்டியான சரியான பரிசு தான் கைக்கடிகாரம்.

5. ரொமான்டிக் கப்

ரொமான்டிக் கப்பை பரிசாக கொடுத்தல், தினமும் காலை அதில் காபி குடிக்கையில் உங்கள் ஞாபாகம் வரும்; நீங்கள் இருவரும் ஒன்றாக செலவிட்ட நேரங்கள் ஞாபாகத்திற்கு வரும். இவ்வகை கப் கவர்ச்சியுடன் விளங்கும். உங்களுக்கு பிடித்த டிசைனை தேர்வு செய்யலாம்.

மேலும் டேட்டிங் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்