பச்சை புல்வெளிகளுக்கிடையே அம்பானி மகனின் டேட்டிங்: வெளியான புகைப்படம்

Report Print Deepthi Deepthi in டேட்டிங்

பச்சை புல்வெளிகளுக்கிடையே தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மூன்றாவது மகன் ஆனந்த் அம்பானி டேட்டிங் செய்த புகைப்படம் தற்போது வைரலாகியுள்ளது.

ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரரும், பிரபல தொழிலதிபருமான முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் மற்றும் மகள் இஷா ஆகிய இருவருக்கும் இந்த ஆண்டு திருமணம் நடைபெறவுள்ளது.

கடந்த மாதம் தான் தனது ஆண்டலியா இல்லத்தில், மூத்த மகன் ஆகாஷ் அம்பானிக்கும், வைர வியாபாரியின் மகள் ஸ்லோகா மேத்தாவுக்கு கோலாகலமாக நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

அடுத்ததாக மகள் இஷா அம்பானியும், ரியல் எஸ்டேட் தொழிலதிபரை திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார். இதுதொடர்பான புகைப்படம் வெளியானது. இந்நிலையில், மூன்றாவது மகன் ஆனந்த் அம்பானி தனது தோழியான ராதிகாவை காதலித்து வருவதாக கூறப்பட்டது.

இவர்கள் இருவரும் இதற்கு முன்னர் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியானது. மேலும், ஆகாஷின் நிச்சயதார்த்ததின்போதும் ராதிகா கலந்துகொண்டார். இந்நிலையில், ஆனந்தும் ராதிகாவும் பச்சை புல்வெளிகளுக்கு இடையே ஒருவரையொருவர் காதல் பார்வை பார்த்துக்கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

இவர்கள் இருவரும் டேட்டிங்கில் இருப்பதாக கூறுப்படுகிற நிலையில், விரைவில் இதுகுறித்த அறிவிப்பு அம்பானி குடும்பத்தில் இருந்து வரும் என கூறப்படுகிறது. மொத்தத்தில் முகேஷ் அம்பானி, தனது மூன்று பிள்ளைகளுக்கும் அவர்களது விருப்பப்படியே திருமணம் செய்துவைக்கவிருக்கிறார்.

மேலும் டேட்டிங் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்