நானும் லவ் பண்ணியிருக்கேன்: காதல் குறித்து மனம் திறந்த ஜாக்குலின்

Report Print Harishan in டேட்டிங்

பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் ஜாக்குலின் காதலர் தினத்தை முன்னிட்டு தனது காதல் வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

தமிழக சின்னத்திரை உலகில் கரகர குரலுடன் தவிர்க்க முடியாத நிகழ்ச்சி தொகுப்பாளராக தனக்கென ஒரு பாணியில் கலக்கி வருபவர் ஜாக்குலின்.

அப்பா இல்லாமல் தன்னை கஷ்டப்பட்டு வளர்த்த அம்மா மீது மிகுந்த பாசமும், பற்றும் கொண்ட ஜாக்குலினுக்கு ஒரு தம்பியும் உண்டு.

தற்போது நயன்தாரா நடிக்கும் திரைப்படத்தில் அவருக்கு தங்கச்சியாக நடித்து வரும் ஜாக்குலின் தன் காதல் வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

அவர் கூறுகையில், “நான் எட்டாவது படிக்கும்போது என் தம்பி மூணாவது படிச்சிட்டு இருந்தான். அந்த சமயத்தில் என்கிட்ட கொடுக்கச்சொல்லி லவ் லெட்டரும், சாக்லேட்டும் யாராவது கொடுத்துவிடுவாங்க. என் தம்பி செம கேடி.

சாக்லேட்டை அவன் சாப்பிட்டுட்டு லெட்டரை அவனோட ஸ்கூல் பேக்குள்ள வச்சுப்பான். ஒருநாள் அந்த லெட்டர் எல்லாத்தையும் எங்க அம்மா பார்த்துட்டு செம அடி அவனுக்கு. அப்போதான் எனக்கு இவ்வளவு லவ் லெட்டர் வந்ததே தெரியும்.”

“லவ்னா என்னான்னு சரியா புரியாத வயசுல லவ் பண்ணியிருக்கேன். இதுதான் லவ்னு தெரியுற வயசுல ப்ரேக்-அப் ஆகிடுச்சு. பார்த்த உடனே காதல் வரும்னு எனக்கு நம்பிக்கை இல்லை. நல்லா பழகுன அப்புறம் தான் வரனும்.” என கூறியுள்ளார்.

மேலும், அப்படி ஒருத்தரை தான் சந்திக்கும் பட்சத்தில் என் காதலை அவரிடம் சொல்வதற்கு முன்பாகவே என் அம்மாவிடம் கூறிவிடுவேன் என உறுதியாக தெரிவித்துள்ளார் ஜாக்குலின்.

மேலும் டேட்டிங் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers