கர்ப்பகாலத்தில் பல ஆண்களுடன் டேட்டிங் சென்றேன்: தாயின் வாக்குமூலம்

Report Print Deepthi Deepthi in டேட்டிங்
2023Shares

நியூயோர்க்கை சேர்ந்த பெண்மணி ஒருவர் தனக்கு பல்வேறு நபர்களுடன் டேட்டிங் செல்வது பிடிக்கும் என்பதால் தனது கர்ப்பகாலத்தில் கூட பலருடன் டேட்டிங் சென்றதாக கூறியுள்ளார்.

Alyssa Shelasky(40) என்ற பெண்மணிக்கு தற்போது இரண்டு வயதில் குழந்தை ஒன்று உள்ளது.

தனது வாழ்க்கை குறித்து இப்பெண்மணி கூறியதாவது, பல்வேறு ஆண்களுடன் டேட்டிங் செல்லும்போது அழுத்தம் கொண்டதாக நான் உணரவில்லை. எனக்கு மகள் இருந்தாலும், தற்போது வரை டேட்டிங் செல்வதற்காக சிறந்த ஆண்மகன்களை தேடிக்கொண்டு தான் இருக்கிறேன்.

ஆனால் நான் ஒருபோதும் திருமணம் செய்துகொள்ளமாட்டேன், அதில் எனக்கு எவ்வித உடன்பாடும் இல்லை. ஒரு நல்ல ஆண்மகனுடன் டேட்டிங் செல்ல வேண்டும் அவருடன் எனது வாழ்க்கை பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் இது எனது ஆசை.

மேலும், எனது உடல்அமைப்பு கவர்ச்சியாக இருப்பதாகவும் உணர்கிறேன் என கூறியுள்ளார்.

மேலும் டேட்டிங் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்