வாழ்க்கையில் வெற்றிகள் குவிய சரஸ்வதி பூஜை அன்று தவறாமல் செய்ய வேண்டியவை

Report Print Jayapradha in கலாச்சாரம்
489Shares

சரஸ்வதி பூஜை வருடம்தோறும் அக்டோபர் மாதம் கொண்டாடப்படுகிறது. இந்த வருட சரஸ்வதி பூஜை இந்த வாரம் கொண்டாடப்பட இருக்கிறது.

இந்த சரஸ்வதி பூஜையில் முறையாக நீங்கள் சரஸ்வதியை வழிபட்டால் உங்களுக்கு அனைத்து விதமான செல்வங்களும், திறமைகளும் கிடைக்கும்.

சரஸ்வதி பூஜை செய்வது எப்படி?
  • சரஸ்வதி பூஜை நடத்த நல்ல நேரம் காலை 9.30 முதல் 10.30 மணி. இந்த நேரத்தில் ஒரு சிறிய மேஜையில் சரஸ்வதி படம் வைக்க வேண்டும்.
  • பின் மேஜையின் மேல் புத்தகங்களை அடுக்கி அதன்மேல் சரஸ்வதியின் படத்தை வைத்து பின் அருகம் புல், மலர்மாலைகள் அணிவித்துஇ வழிபட வேண்டும்.
  • படத்தின் முன் இலைவிரித்து, வெற்றிலை பாக்கு, பழம், பொரி, சுண்டல், சர்க்கரைப் பொங்கல், தண்ணீர் ஆகியவற்றைப் படைக்க வேண்டும்.
  • கற்பூரம் அல்லது நெய்தீபம் காட்டி வழிபாடு செய்ய வேண்டும். சிறு குழந்தைகளுக்கு பிரசாதம், கல்வி உபகரணங்கள், படிப்புச் செலவிற்கு பணஉதவி ஆகியவற்றை வசதிக்கு தக்கபடி கொடுக்க வேண்டும்.
  • மறுநாள் காலையில் புதிதாக இலைபோட்டு வெற்றிலை பாக்கு, பழம், பொரி படைத்து பூஜை செய்த பின் படத்தை எடுத்து விட வேண்டும்.
சரஸ்வதி பூஜையின் பலன்கள்
  • தினமும் தொடர்ந்து சரஸ்வதியை வழிபட்டு வந்தால் இல்லத்தில் எப்பொழுதும் மகிழ்ச்சி உண்டாகும்.
  • மாணவர்கள் மற்றும் வேலை செல்பவர்களுக்கு சரஸ்வதியை வணங்கினால் அவர்கள் படிப்பிலும் துறையிலும் வெற்றியும் செயல்திறனும் அதிகரிக்கும்.
  • சரஸ்வதி பூஜை வாழ்க்கையில் உள்ள அனைத்து தடங்கல்களையும் நீக்கும். மேலும் இதுவரை தோல்விகளை சந்தித்தவர்களுக்கு வெற்றிக்கான ஏணிப்படிகளை சரஸ்வதி தேவி வழங்குவார்.
  • மாணவர்களுக்கு நல்ல மதிப்பெண்கள், உயர் சமூக நிலை, பதவி உயர்வு மற்றும் வாழ்க்கையில் முன்னேற்றம் போன்றவை சரஸ்வதி பூஜையின் மூலம் கிடைக்கும்.

மேலும் கலாச்சாரம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்