உலகில் இந்த நாடுகளில் எல்லாம் எச்சரிக்கையாக இருக்கவும்

Report Print Gokulan Gokulan in குற்றம்
590Shares

உலகில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு சுற்றுலா செல்லும் பயணிகளின் அனுபவத்தினை அடிப்படையாக வைத்து, அதிக அளவில் திருட்டுகள் நடைபெறும் இடம் என்பது குறித்து இந்த பட்டியல் வெளியாகியுள்ளது.

மாட்ரிட் – ஸ்பெய்ன்

ஸ்பெயினின் தலைநகரம் மாட்ரிட் மிகவும் அழகானதும் கவர்ச்சிகரமானதுமான இடமாகும், ஆகவே இதன் கரணமாக இயல்பாகவே உலகம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை ஈர்க்கிறது.

ஆனால் நீங்கள் மாட்ரிட் செல்லும் போது, உங்கள் பணப்பையிலும் மற்ற சாமான்களிலும் கவனம் செலுத்துவது எப்போதும் நல்லது.

உங்களுடைய பணப்பையை எடுத்துக் கொள்ள அந்த சிறிய வாய்ப்பு கிடைக்காதா என பல பிக்பாக்கெட்டுகள் அங்கு உள்ளன. அவர்கள் உங்கள் பணப்பையை மட்டுமல்லாமல், நகை போன்ற பிற விலைமதிப்பற்ற பொருட்களை மட்டும் குறிவைத்து தான் தூக்குவார்கள்.


El Rastro fleamarket and Metro ஆகியவை தான் ஸ்பெயினில் பிக்பாக்கெட் சம்பவம் அதிகம் நடைபெரும் இடமாகும், இதை தவிர பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், ரயில் நிலையம், பேருந்து நிலையம் ஆகியவையும் குற்றசெயல் அதிகம் நிகழ வாய்ப்புள்ள இடங்களாகும்.

புருனோஸ் அரிஸ் – அர்ஜெண்டினா

அர்ஜென்டினாவின் பியூனாஸ் எயர்ஸ் நகரம் மிக அழகான நகரம். உலகின் அனைத்து பகுதிகளிலிருந்தும் குறிப்பாக தென் அமெரிக்காவிலிருந்து பெரும்பாலான மக்களை ஈர்க்கும் ஒரு நகரம் ஆகும்.

இங்கு சிறியவகை குற்றங்களும், கண நேரத்தில் நிகழும் திருட்டுகளும் சர்வசாதாரணம் என்கிறார்கள், ஏற்கனவே பொருளை தொலைத்த அனுபவஸ்தர்கள்.


இந்த நகரத்தில் நீங்கள் இருக்கும்போது சுற்றி எப்பொழுதும் தேடிப் பாருங்கள். யாரோ ஒருவர் ஜாக்கெட்டை அணிந்து கொண்டு உங்களையே பார்த்தாலோ, உங்களின் கவனத்தை திசைதிருப்பும் விதமாக பேசினாலோ அவர் உங்களிடம் ஏதோ திட்டம்ம் தீட்டுகிறார் என அர்த்தம், அதுவும் உச்சி வெயில் நேரமாக இருந்தால் சந்தேகமே வேண்டாம் அவர் ஒரு பிக்பாக்கெட் தான் அப்படிப்பட்ட நபரை தவிர்க்கவும்.

ஆம்ஸ்டர்டேம் – நெதர்லாந்து


இது ஒரு பெரிய இடம், இங்கு எப்பொழுதும் முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். இங்குள்ள மக்கள் மிகவும் நட்பாக பேசிபழகுவார்கள். ஆகவே அவர்கள் நல்லவர்கள் என நினைத்து பழகினால் திருட்டு நிச்சயம் .ஏனெனில் இங்குள்ள பிக்பாக்கெட்ஸ் மிகவும் நட்பாக இருப்பார்கள்.

அவர்கள் உங்கள் பணப்பையையே நேசிக்க செய்வார்கள். இந்த நகரம் மிகவும் குளிராகவும் மற்றும் நிறைய நட்பான மக்களையும் கொண்டுள்ளது. ஆனால் உங்கள் பொருள் களவாடபடாது என்பதற்க்கு எந்த உத்திரவாதமும் இல்லை ஆகவே ஆம்ஸ்டர்டாமில் மிகவும் முன்னெச்சரிக்கை அவசியமாகும்.

ஏதென்ஸ் – கிரேக்கம்

ஏதென்ஸில் பின்புற பாக்கெட்டில் உங்கள் பணப்பையைத் தவிர்க்கவும், இல்லையேல் பிக்பாக்கெட் காரர்கள் திறமையை காட்டுவார்கள் முக்கியமாக பின்புற பாக்கெட்டில் வைத்தால் அதை சுலபமாக எடுத்துவிடுவார்கள். எனவே இங்கு பணம் மற்றும் முக்கியமான பொருட்களை ஒரு பையில் வைத்துக்கொள்வது பாதுகாப்பானது.


இப்பகுதி பெரும்பாலான மக்களும் மிகவும் நட்பானவர்கள் ஆனால், அந்த நட்பை கொண்டு உங்கள் பொருட்களில் அவர்கள் இலக்கை பதிப்பர், சாத்தியமாகும் நேரத்தில் திருடிவிடுவார்கள்.எனவே இங்கு மிகவும் நட்பான மக்களை தவிர்க்கவும்.

இந்த விஷயங்களை தவிர்க்க சிறந்த விஷயம் உங்கள் பணப்பையை மற்றும் பிற விலைமதிப்பற்ற பொருட்களை நன்றாக பார்த்து கொள்ள வேண்டும்.

பெண்கள் வழக்கமாக தங்கள் ஆவணங்களையும், பணத்தையும் வைக்க ஒரு சிறிய வேலட் இங்கு கொண்டு வருகின்றனர். அதை பயன்படுத்துவது நல்லது.

ஹனோய் – வியட்னாம்

வியட்நாமில் ஹனோய்க்கு வருகை தருவது சிறந்த அனுபவமாகும். இது வியட்நாமின் பெருமைமிகு அடையாளம் ஆகும். இந்த நகரத்தில் பல்வேறு கலாச்சார கட்டிடங்கள் மற்றும் பிற அழகான இடங்கள் ரசிப்பதற்காக உள்ளன. இந்த இடத்தில் தான் மிக அதிக பிக் பாக்கெட்டுகளும் உள்ளனர்.


நீங்கள் எப்போதாவது இந்த நகரத்திற்கு வந்தால் குறிப்பாக மோட்டார் சைக்கிள்களுடன் இருக்கும் ஆண்கள் தவிர்க்கவும். மிகவும் விழிப்பு அவசியமாகும் பிக் பாக்கெட்டுகள் எளிதில் சுற்றுலா பார்வையாளர்களை அடையாளம் கண்டு திருடவேண்டிய பொருளின் இலக்கை அடையாளம் காண்பதும் இங்கு சுலபம்.

நெரிசலான இடங்களில் உங்களை திசை திருப்பக்கூடிய எந்த நபரையும் தவிர்க்கவும்.ரயில் மற்றும் பேருந்தில் அதிகளவு திருட்டு நிகழ வைப்புள்ளது.

மேலும் குற்றம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்