நடுரோட்டில் வாலிபர் ஓட ஒட விரட்டி படுகொலை

Report Print Kabilan in குற்றம்
39Shares
39Shares
ibctamil.com

காஞ்சீபுரத்தில் வாலிபர் ஒருவரை, நடுரோட்டில் ஓட ஓட விரட்டி மர்ம கும்பல் ஒன்று கொடூரமாக கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சீபுரம் மாவட்டம் மறைமலை நகரைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவரின் 21 வயது மகன் அஸ்வின், டிப்ளமோ படித்துவிட்டு மல்ரோஜபுரத்தில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு, தற்காலிகமாக ஆட்கள் சேர்க்கும் பணி செய்து வந்தார்.

இந்நிலையில், நேற்று மாலை மல்ரோஜபுரத்தில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் பேரமனூர் நோக்கி ஜி.எஸ்.டி சாலையில் அஸ்வின் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அவரை மூன்று பேர் கொண்ட கும்பல் இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து, அவர் மீது மோதியது. இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்த அவரை அந்த கும்பல் தாங்கள் கொண்டு வந்த வீச்சு அரிவாளால் வெட்டத் தொடங்கியது.

உடனே அவர்களிடம் இருந்து தப்பி ஓடிய அஸ்வினை, அந்த கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டியது. படுகாயமடைந்த அஸ்வின், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தை ஜி.எஸ்.டி சாலையில் சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார், அஸ்வின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், அஸ்வினின் சித்தப்பா செல்வகுமார் கூறுகையில், ‘என் அண்ணன் மகன் அஸ்வின் மீது பொலிஸில் எந்த புகார்களும் இல்லை. அவனை எதற்காக வெட்டிக் கொலை செய்தார்கள் என்று தெரியவில்லை.

உண்மையான குற்றவாளிகளை பொலிஸார் பிடிக்கும் வரை, நாங்கள் புகார் தரமாட்டோம், உடலையும் வாங்க மாட்டோம்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் குற்றம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்