குழுக்களிடையே ஏற்பட்ட மோதலால் ஜேர்மன் அகதிகள் முகாம் தீக்கிரை

Report Print Thayalan Thayalan in குற்றம்
குழுக்களிடையே ஏற்பட்ட மோதலால் ஜேர்மன் அகதிகள் முகாம் தீக்கிரை

ஜேர்மனியின் அகதிகள் முகாம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் முகாமின் பெரும்பகுதி தீக்கிரையானதுடன் அகதிகள் சிலர் காயமுற்றனர்.

ஜேர்மனியின் வட பகுதியின் டன்கிர்க்கில் உள்ள கிராண்ட்-சிந்த்தே என்ற அகதி முகாமிலேயே உள்ளூர் நேரப்படி நேற்றிரவு இவ்வனர்த்தம் ஏற்பட்டது. சுமார் ஒரு வருடத்துக்கு முன் நிர்மாணிக்கப்பட்ட இந்த முகாமின் பல பகுதிகள் மரப் பலகைகளால் ஆனவை. இதனால் தீ எளிதில் பரவியது.

இந்த முகாமில் சுமார் ஆயிரத்து 500 பேர் தங்கியிருந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் குர்து இனத்தவர். எனினும், அண்மைக்காலமாக உள்நாட்டுப் பிரச்சினை காரணமாக அதிக எண்ணிக்கையிலான ஆப்கானிஸ்தான் அகதிகளும் இங்கு அடைக்கலம் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், குர்து-ஆப்கன் இனத்தவரிடையே திடீரென்று மூண்ட மோதலின் விளைவாகவே இத்தீவிபத்து ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

விபத்தில் முகாமின் பெரும்பகுதி முற்றாகச் சேதமுற்ற நிலையில், அகதிகள் அருகாமையில் உள்ள முகாம்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.

மேலும் குற்றம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments