சென்னை மந்தைவெளியைச் சார்ந்த கணக்காய்வாளர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் இருந்து காஞ்சி சங்கராச்சாரியார் உள்ளிட்ட 9 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு செய்த மேல்முறையீடு குறித்து 2 வாரத்தில் பதிலளிக்க எதிர்தரப்பினருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மந்தைவெளியை சேர்ந்த கணக்காய்வாளர் ராதாகிருஷ்ணன் என்பவர் கடந்த 2002ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20ஆம் திகதி தாக்கிகொலை செய்யப்பட்டார்
இதையடுத்து இந்த வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார் சுப்ரமணி என்ற ஜெயேந்திரர் சரஸ்வதி உட்பட்ட 12 பேர் மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதையடுத்து எஞ்சிய 9 பேர் மீதான வழக்கை விசாரித்த சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட காஞ்சி சங்கராச்சாரியார் உள்ளிட்ட 9 பேரையும் கடந்த ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி விடுதலை செய்தார்
எனினும் இந்த வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார் உள்ளிட்ட 9 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் 77 நாட்கள் கழித்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.