மதுசனின் சகலதுறை ஆட்டம் கைகொடுக்க முதல் வெற்றியை பதிவு செய்தது வடக்கு மாகாண அணி!

Report Print Samaran Samaran in கிரிக்கெட்
மதுசனின் சகலதுறை ஆட்டம் கைகொடுக்க முதல் வெற்றியை பதிவு செய்தது வடக்கு மாகாண அணி!

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் ஏற்பாடு செய்துள்ள 19 வயதுக்குட்பட்ட மாகாண அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டியில் வட மாகாண அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

பி. சரவணமுத்து மைதானத்தில் இன்று இடம்பெற்ற போட்டியில் வட-மேல் மாகாண அணியை 49 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டக்வோர்த் லூயிஸ் முறைமூலம் வடமாகாண அணி வெற்றிகொண்டுள்ளது.

மழைகாரணமாக 25 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட போட்டியில் முதலில் ஆடிய வடமாகாண அணி 7 விக்கட்டுக்களை இழந்து 108 ஓட்டங்களைப் பெற்றது.

வடமாகாண அணி சார்பில் மதுஷன் 34 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பதிலுக்கு 122 எனும் இலக்குடன் களம் புகுந்த வட-மேல் மாகாண அணி 16.3 ஓவர்களில் 72 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.

துடுப்பாட்டத்தில் பிரகாசித்த மதுஷன் பந்துவீச்சில் 18 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களை கைப்பற்றினார்.

இதன்முலமாக வடமாகாண அணி டக்வோர்த் லூயிஸ் முறைமூலமாக 49 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் தொடரின் இரண்டாவது வெற்றியையும் பெற்றுக்கொண்டது.

இதன் மூலம் புள்ளிப் பட்டியலில் இரண்டாமிடத்திற்கு முன்னேற வடமாகாண அணி, நாளை மறுதினம் நடைபெறவுள்ள மத்திய மாகாண அணிக்கெதிரான போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் அரையிறுதிக்கு தெரிவாகும் வாய்ப்பைப் பெற்றுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...