தகவல் சட்டத்தின் கீழ் உள்ளீர்க்கப்படும் BCCI: சட்ட ஆணையம் பரிந்துரை!

Report Print Samaran Samaran in கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கொண்டுவர இந்திய சட்ட ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

தகவல் பெறும் உரிமைச் சட்டம் (RTI) மக்களாட்சித் தத்துவத்தில் வெளிப்படையான நிர்வாகம், அரசில் நடக்கும் செயல்கள் மக்களுக்குத் தெரிய வேண்டும் என்ற நோக்கில் 2005-ம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்டது.

இது, அரசு மற்றும் அரசு சார் நிறுவனங்கள் குறித்த தகவலை யார் வேண்டுமானாலும் பெறுவதற்கு 2005 வழிவகை செய்கிறது.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தையும் (பிசிசிஐ) தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசுக்கு இந்திய சட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

அத்துடன் ஐபிஎல் நிர்வாகம் உட்பட பிசிசிஐ கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அமைப்புகளை தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்குள் கொண்டுவரவும் வலியுறுத்தியுள்ளது.

தற்போது, பிசிசிஐ தன்னாட்சி பெற்ற தனியார் அமைப்பாக செயல்பட்டு வருகிறது.

ஐபிஎல் போட்டிகளில் நடைபெற்ற சூதாட்டப் புகார்களைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம் அந்த அமைப்பின் நிர்வாகிகளை நியமிப்பதில் நெறிமுறைகளை விதித்துள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்