தனது மிரட்டல் பந்துவீச்சால் தன் அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்ற மலிங்க!

Report Print Samaran Samaran in கிரிக்கெட்
தனது மிரட்டல் பந்துவீச்சால் தன் அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்ற மலிங்க!

இலங்கையின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க மீண்டும் ஒருமுறை தனது அதிரடி பந்துவீச்சை வெளிப்படுத்தியதன் மூலம் இராணுவப் படை விளையாட்டுக் கழகத்தை 6 விக்கெட்டுகளால் வீழ்த்தி NCC அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

கொழும்பு பி சரா ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இலங்கை உள்ளூர் T20 தொடரின் அரையிறுதி போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இராணுவப்படை விளையாட்டுக் கழகம் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. எனினும் அந்த அணியின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து பறிபோனதால் சவாலான ஓட்டங்களை பெறுவதற்கு தவறியது.

குறிப்பாக லசித் மாலிங்க வீசிய மூன்றாவது ஓவரில் இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டது இராணுவப்படை அணிக்கு பெரும் பின்னடைவாக இருந்தது. இறுதியில் இராணுவப்படை விளையாட்டுக் கழம் 17.1 ஓவர்களில் 102 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

அபாரமாக பந்துவீசிய மாலிங்க 3.1 ஓவர்களில் 14 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். இதன் மூலம் அவர் இம்முறை உள்ளூர் கிரிக்கெட் தொடரில் மொத்தம் 16 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை சாய்த்த வீரர்கள் வரிசையில் சக அணி வீரர் சதுரங்க டி சில்வாவுடன் முதலிடத்திற்கு முன்னேறினார்.

கடந்த ஆண்டு உள்ளூர் T20 தொடரில் மாலிங்க ஒரு ஹெட்ரிக் சாதனையுடன் 12 விக்கெட்டுகளையே வீழ்த்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் எட்ட முடியுமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பாடிய NCC அணிக்கு இலங்கை T20 அணியில் இடம்பெறத் தவறிய நிரோஷன் தக்வெல்ல 19 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 27 ஓட்டங்களை பெற்றதோடு லஹிரு உதாரவும் அதிகபட்சமாக 27 ஓட்டங்களை பெற்றார்.

இறுதியில் NCC அணி 14.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 108 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது.

போட்டியின் சுருக்கம்

இலங்கை இராணுவப்படை விளையாட்டுக் கழகம் – 102 (17.1) – ஹிமாஷ லியனகெ 23, லசித் மாலிங்க 3/14, சச்சிந்த பீரிஸ் 2/18

NCC – 108/4 (14.2) – நிரோஷன் திக்வெல்ல 27, லஹிரு உதார 27, பனுக்க ராஜபக்ஷ 25

முடிவு – NCC அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers