பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் 9ஆவது 'இந்துக்களின் போர்': இம்முறை வெற்றி யார் வசம்?

Report Print Samaran Samaran in கிரிக்கெட்

"இந்துக்களின் போர்” என்று பெருமையாக அழைக்கப்படும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கும் பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரிக்கும் இடையிலான 9 ஆவது இந்துக்களின் துடுப்பாட்ட போட்டியானது இன்று வெள்ளிக்கிழமை மற்றும் நாளை சனிக்கிழமை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் மிகவும் சிறப்பாக நடைபெறவுள்ளது.

ஆரம்பம் தொட்டு ”இந்துக்களின் போர்” துடுப்பாட்ட போட்டியானது யாழ் இந்துக் கல்லூரிக்கும் பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரிக்கும் இடையில் நடைபெற்று வந்தன.

பின்னர் இப்போட்டியினை நடாத்துவதற்கு சரியான சூழ்நிலைகள் இல்லாமையால் கடந்த சில காலங்களில் நடாத்துவதற்கு இயலாமல் போனது.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு மீண்டும் ஆரம்பமாகிய இப்போட்டியானது கடந்த வருடம் பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து இந்த வருடத்திற்கான 9 ஆவது இந்துக்களின் துடுப்பாட்ட போட்டியானது மார்ச் மாதம் (வெள்ளி மற்றும் சனிக்கிழமை) 9, 10ம் திகதிகளில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் மிகவும் சிறப்பாக நடைபெறவுள்ளது.

1982ம் ஆண்டு முதன் முறையாக ஆரம்பிக்கப்பட்ட இந்த இந்துக்களின் மாபெரும் போர், முதன்முறையாக பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றிருந்தது.

இரண்டாவது வருடப் போட்டி 1983ம் ஆண்டு இடம்பெற்றிருந்ததோடு, அப்போட்டி யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடம் போட்டி சமநிலையில் முடிவடைந்தநிலையில் இம்முறை நடைபெறும் போட்டியானது மிகவும் எதிர்பார்புக்குரியதாக மாறியுள்ளது.

நடந்து முடிந்த 8 போட்டிகளில் மூன்று போட்டிகளில் பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி வென்றும் ஒரு போட்டியில் யாழ் இந்துக் கல்லூரி வென்றும் மற்றைய நான்கு போட்டிகளும் சமனிலையில் முடிவடைந்தது.

இதன் அடிப்படையில் 3-1 என்று இருக்கின்ற நிலையில் இம்முறை யாழ் இந்துக் கல்லூரி வென்று 3-2 நிலைபெறுமா என்கிற ஆர்வம் பலருக்கும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மூன்று தசாப்த பழமை வாய்ந்த இந்த துடுப்பாட்ட போட்டியானது இரண்டு பலமான அணிகள், இரண்டு அதிகளவிலான மாணவர்களை ரசிகர்களாகக் கொண்ட ஆதரவு, பழைய மாணவர்களின் அதிக ஈடுபாடு,

நீண்டகாலம் செல்லும் பாரம்பரியம் ஆகியன யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கும், பம்பலப்பிட்டி இந்துக் இந்துக் கல்லூரி இற்குமிடையிலான இந்த 9வது இந்துக்களின் துடுப்பாட்ட போட்டியை அதிகம் எதிர்பார்ப்புள்ள போட்டியாக மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers