என் ஒரு பக்க மீசையை மழித்து விடுகிறேன்: அஸ்வின் விடுக்கும் ருசிகர சவால்

Report Print Arbin Arbin in கிரிக்கெட்
0Shares

இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர்களை புஜாரா மட்டும் கிரீசை விட்டு மேலேறி வந்து தூக்கி அடித்து விட்டால் தன் மீசையை மழித்துக் கொள்வதாக அஸ்வின் சவால் விடுத்துள்ளார்.

சமீபத்திய அவுஸ்திரேலிய தொடரில் அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்களின் பாடிலைன் பவுலிங்குக்கு விட்டுக் கொடுக்காமல் கை, கால், ஹெல்மெட், முதுகு என்று அடி வாங்கிக் கொண்டு புதிய சுவராக உருவெடுத்தார் புஜாரா.

பிரிஸ்பன் டெஸ்ட் 2வது இன்னிங்சிலும் மிகப்பிரமாதமாக ஆடி வெற்றிக்கு உறுதுணை புரிந்தார். இந்நிலையில் சென்னையில் இங்கிலாந்துடன் முதல் டெஸ்ட் போட்டி நடைபெறவிருக்கிறது.

இது தொடர்பாக இந்திய துடுப்பாட்டப் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோரிடம் பேசிய அஸ்வின்,

இங்கிலாந்துக்கு எதிராக வரும் டெஸ்ட் தொடரில் மொயின் அலி உட்பட டாம் பெஸ், ஜாக் லீச் ஆகிய சுழற்பந்து வீச்சாளர்களை புஜாரா ஆடும்போது மேலேறி வந்து தலைக்கு மேல் தூக்கி அடித்தால் என் ஒருபக்க மீசையை மழித்துக் கொள்கிறேன். இந்த சவாலை புஜாரா ஏற்கத் தயாரா? என்றார்.

இதற்கு விக்ரம் ராத்தோர், ‘நல்ல சவால்தான், இதை புஜாரா ஏற்பதற்கு வாய்ப்பில்லை.’ என்றார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்