ராஜஸ்தான் அணியின் முக்கிய பொறுப்பில் இலங்கை ஜாம்பவான் சங்ககாரா நியமனம்! உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்

Report Print Santhan in கிரிக்கெட்
228Shares

ஐபிஎல் தொடருக்கான இந்தாண்டு ராஜஸ்தான் அணி பல்வேறு மாற்றங்களை கொண்டு வரும் நிலையில், முக்கிய பொறுப்பில் இலங்கை ஜாம்பவான் சங்ககாராவை நியமித்துள்ளது.

இந்தியாவில் இந்தாண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரின் 14-வது சீசன், வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறவுள்ளது.

இதற்காக தங்கள் அணியில் இருந்து நீக்கப்படும் வீரர்களின் பட்டியலை அனைத்து அணிகளும் சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்டன.

இதில் யாரும் எதிர்பார்க்காத வகையில், ராஜஸ்தான் அணி தன்னுடைய அணியில் இருந்த அவுஸ்திரேலியாவின் நம்பிக்கை நட்சத்திரமான ஸ்மித்தை காலி செய்தது. இது பலருக்கும் வியப்பாக உள்ளது.

ஸ்மித்தை சென்னை அணி எப்படியும் எடுத்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்மித் இல்லாததால், ராஜஸ்தான் அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சன் இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுவிட்டது.

இதைத் தொடர்ந்து தற்போது இலங்கை அணியின் முன்னாள் வீரரான குமார் சங்கக்கார தான் இந்த ஆண்டு ராஜஸ்தான் அணியின் புதிய இயக்குனராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இலங்கை அணியின் முக்கிய ஜாம்பவானான குமார் சங்கக்கார ராஜஸ்தான் அணியை வழிநடத்துவது புதிய நம்பிக்கையைத் தருகிறது. இதனால் ராஜஸ்தான் அணி ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்