மூன்று வடிவிலான கிரிக்கெட்டில் அறிமுகமாகி தமிழக வீரர் நடராஜன் சாதனை

Report Print Arbin Arbin in கிரிக்கெட்
234Shares

அவுஸ்திரேலியா தொடரில் ஒருநாள், டி20, டெஸ்ட் போட்டி என மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் அறிமுகமாகி தமிழக வீரர் நடராஜன் சாதனைப் படைத்துள்ளார்.

இடது கை வேகப்பந்து வீச்சாளரான தமிழக வீரர் டி.நடராஜன் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாட அவுஸ்திரேலியா தொடருக்கான டி20 இந்திய அணியில் இடம்பிடித்தார்.

முதலில் ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. முதல் இரண்டு போட்டிகளில் களம் இறங்காத டி. நடராஜன் 3-வது ஒருநாள் போட்டிக்கான அணியில் சேர்க்கப்பட்டார்.

இதனால் ஒருநாள் கிரிக்கெட் போட்டி மூலம் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அறிமுகம் ஆனார். முதல் போட்டியிலேயே சிறப்பாக பந்து வீச, அடுத்து நடந்த டி20 கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார்.

இவரது சிறப்பான பந்து வீச்சால் இந்தியா டி20 தொடரை 2-1 எனக் கைப்பற்றியது. அதன்பின் டெஸ்ட் போட்டிக்கான வலைப்பயிற்சி வீரராக அணியுடன் அங்கேயே தங்கினார்.

வேகப்பந்து வீச்சாளர்கள் பலர் காயம் அடைய பிரிஸ்பேனில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனார். முதல் போட்டியிலேயே லாபஸ்சேன், மேத்யூ வடே விக்கெட்டுகளை சாயத்தார்.

இதன்மூலம் ஒரே பயணத்தில் மூன்று வடிவிலான கிரிக்கெட்லும் அறிமுகம் ஆன ஒரே இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் நடராஜன்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்