ஐபிஎல் தொடரில் 100 கோடி ரூபாய் சம்பளம் பெறும் முதல் வெளிநாட்டு வீரர் இவர் தான்! உறுதிப்படுத்திய தகவல்

Report Print Santhan in கிரிக்கெட்
490Shares

ஐபிஎல் தொடரில் இதுவரை மொத்தம் 100 கோடி ரூபாய் வரை சம்பளம் பெற்ற வீரர்களின் பட்டியலில், இப்போது தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த வீரர் இணைந்துள்ளார்.

இந்தியாவில் கடந்த 2008-ஆம ஆண்டு முதல் ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கு இந்தியாவில் மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் ரசிகர்கள் உள்ளனர்.

அந்தளவிற்கு பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் இருக்கும். அந்த வகையில் இந்தாண்டிற்கான ஐபிஎல் தொடர் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறவுள்ளது.

இதற்கான ஏலம் வரும் பெப்ரவரி மாதம் 11-ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதனால் அனைத்து அணிகளும் தங்களது அணியிலிருந்து தக்கவைத்துக் கொள்ளும் மற்றும் நீக்கப்படும் வீரர்களின் முடிவை வரும் 20-ஆம் திகதிக்குள் அறிவிக்க வேண்டும்.

இதனால் அனைத்து அணிகளும் தங்களது அணியில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு இருக்கும் வீரர்களை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் தற்போது அணியில் தக்க வைத்துக்கொள்ள இருக்கும் வீரர் ஒருவரை அறிவித்துள்ளது.

அந்தவகையில் பெங்களூர் அணியில் தென்னாப்பிரிக்கா வீரரான ஏ.பி.டி வில்லியரஸை தனது அணியில் தக்க வைத்துக்கொள்வதாக அறிவித்துள்ளது. இவருக்கு இந்த ஆண்டு 11 கோடி ரூபாய் சம்பளமாக நிர்ணயித்து இருக்கிறது.

இதன் மூலம் இவர் ஐபிஎல் தொடர் மூலம் இதுவரை 100 கோடி ரூபாய் சம்பளம் பெறும் முதல் வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை பெறவுள்ளார்.

கடந்த 2008-ஆம் ஆண்டிலிருந்து ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் டி வில்லியர்ஸ் இதுவரை 91.5 கோடி சம்பளம் பெற்றிருக்கிறார்.

இந்த ஆண்டுக்கான 11 கோடி ரூபாய் சேர்க்கையில் 102.5 சம்பளம் பெற்றதன் மூலம் 100 கோடிக்கு மேல் சம்பளம் பெற்று டோனி, ரோகித் சர்மா மற்றும் கோய்ஹ்லியுடன் இணைந்துள்ளார். இதன் மூலம் ஏபி.டி வில்லியர்ஸ் ஐபிஎல் தொடரில் 100 கோடி சம்பளம் பெற்ற முதல் வெளிநாட்டு வீரராக ஆகப்போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்