ஜோ ரூட் அபார சதம்! வலுவான நிலையை நோக்கி இங்கிலாந்து: பந்து வீச்சில் திணறி வரும் இலங்கை

Report Print Santhan in கிரிக்கெட்
91Shares

இலங்கை அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வலுவான நிலையில் ஆடி வருகிறது.

இங்கிலாந்து அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு முதலில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, இங்கு இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

இதில் இரு அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று கல்லி மைதானத்தில் துவங்கியது. அதன் படி நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி, முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

இதையடுத்து இலங்கை அணிக்கு துவக்க வீரர்களாக, லகிரு திரிமண்ணே 4 ஓட்டங்களும், குசால் பெரேரா 20 ஓட்டங்களிலும் வெளியேற, அடுத்து வந்த குசல் மெண்டிஸ் டக் அவுட், ஆஞ்சிலே மேத்யூஸ் 27 ஓட்டங்கள், தலைவர் தினேஷ் சண்டிமால் 28 ஓட்டங்கள், நிரோஷன் டிக்வெல்லா 12, தசன் சனகா 23, வகிண்டு ஹசரங்கா 19 என அவுட்டாகியதால், இலங்கை அணி 135 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இங்கிலாந்து அணியில், டாம் பெஸ் 5 விக்கெட்டுகளையும், ஸ்டூவர்ட் பிராட் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸை துவங்கிய இங்கிலாந்து அணிக்கு துவக்க வீரர்களாக ஜார்க் கிராவ்லி மற்றும் டாம் சிப்ளி களமிறங்கினர்.

இதில் ஜார்க் கிராவ்லி 9 ஓட்டங்களிலும், டாம் சிப்ளி 4 ஓட்டங்களிலும் வெளியேற, அடுத்து வந்த ஜானி பெர்ஸ்டோவ், ஜோ ரூட்டுடன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில், 47 ஓட்டங்களிலும் பெர்ஸ்டோவ் பவுலியன் திரும்பினார்.

அடுத்து வந்த டான் லாரன்ஸ் இலங்கை அணியின் பந்து வீச்சை எளிதாக சமாளிக்க, மறு புறம் ஜோ ரூட் சிறப்பாக விளையாடி வர, இங்கிலாந்து அணியின் ஒரு வலுவான இலக்கை நோக்கி சென்று கொண்டிருந்தது.

இதில் ஜோ ரூட் 160 ஓட்டங்கள் எடுத்த நிலையிலும், டான் லாரன்ஸ் 73 ஓட்டங்கள் எடுத்த நிலையில் விளையாடி வருகின்றனர். இங்கிலாந்து அணி இரண்டாம் நாளான இன்று சற்று முன் வரை 3 விக்கெட் இழப்பிற்கு 304 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது.மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்