இந்தியா வா... உனக்கு அது தான் கடைசி சீரிசா இருக்கும்! அவுஸ்திரேலியா கேப்டனை எச்சரித்த அஸ்வின் வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்
390Shares

அவுஸ்திரேலியா அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஸ்ட்லட்ஜிங்கில் ஈடுபட்ட கேப்ட டிம் பெய்னை நீ இந்தியாவுக்கு வா அது தான் உனக்கு கடைசி சீரிசா இருக்கும் என்று கூறிய வீடியோ இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்றது. இப்போட்டியில் அவுஸ்திரேலியா அணி நிர்ணயித்த 407 ஓட்டங்களை விரட்டிய இந்திய அணி, தோல்வியை சந்தித்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், கடைசி கட்டத்தில் அஸ்வின் மற்றும் விகாரியின் சிறப்பான ஆட்டத்தால் ஆட்டம் டிரா செய்யப்பட்டது. அஸ்வினின் பேட்டிங்கை கண்டு முன்னணி வீரர்கள், ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில், இப்போட்டியில் அவுஸ்திரேலியா அணியின் கேப்டனான டிம் பெய்ன், அஸ்வினை ஸ்ட்லட்ஜின் செய்தார். அப்போது, அஸ்வின் நீ இந்தியா வா, உனக்கு அது தா கடைசி தொடராக இருக்கும் என்று கூறினார்.

இந்த வீடியோ இப்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்