‘பத்து பத்து பால்’... விஹாரிடம் தமிழில் பேசி சிட்னியில் அவுஸ்திரேலிய வீரர்களை திணறவிட்ட அஸ்வின்: வைரலாகும் வீடியோ

Report Print Basu in கிரிக்கெட்
962Shares

சிட்னியில் நடந்த அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்டை இந்தியா டிரா செய்தது.

3வது டெஸ்ட் டிராவில் முடிந்த நிலையில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகள் முடிந்த நிலையில் தொடர் 1-1 என்ற வெற்றி கண்ககில் சமநிலையில் இருக்கிறது.

3வது டெஸ்டில் விஹாரி-அஸ்வின் ஜோடி கடைசி வரை அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை கதறவிட்டனர்.

விஹாரி 161 பந்துகளில் 4 பவுண்டரி அடித்து 23 ஓட்டஙகள் அடித்தார். ரவிச்சந்திரன் அஸ்வின் 128 பந்துகளில் 7 பவுண்டரி அடித்து 39 ஓட்டங்கள் எடுத்தார்.

அஸ்வின்-விஹாரி பார்ட்னர்ஷிப்பை உடைக்க அவுஸ்திரேலிய வீரர்கள் பல யுத்திகளை கையாண்டனர். ஆனால், அது ஏதும் பலன் அளிக்கவில்லை. அதற்கு முக்கிய காரணம் தமிழக வீரர் அஸ்வின் தான்.

போட்டியின் போது விக்கெட் இழக்கக் கூடாது என திட்டத்துடன் விளையாடிய அஸ்வின், விஹாரியிடம் தமிழில் பேசி அவரை ஊக்குவித்துகொண்டே இருந்தார்.

‘பத்து பத்து பால் ஆடினா 40 கீழ வந்துடலாம், விளையாடு’ என விஹாரியிடம் அஸ்வின் தமிழில் பேசியது ஸ்டம்ப் மைக்கில் பதிவானது. தற்போது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்