மிரட்டிய தமிழக வீரர்கள்! சிக்சர்களாக பறக்கவிட்ட தினேஷ் கார்த்திக்... அசத்தலான வெற்றியை சுவைத்த அணி

Report Print Raju Raju in கிரிக்கெட்
331Shares

முஷ்டாக் அலி கோப்பை தொடரின் முதல் ஆட்டத்தில் தமிழக அணி வெற்றி பெற்றுள்ளது.

12-வது சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் 6 நகரங்களில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 38 அணிகள் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. 10 மாதங்களுக்கு பிறகு இந்தியாவில் நடக்கும் முதல் உள்ளூர் கிரிக்கெட் போட்டி இதுவாகும்.

இதில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழக அணி எலைட் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. தமிழக அணி தனது முதல் ஆட்டத்தில் ஜார்கண்ட் அணியை கொல்கத்தா ஈடன்கார்டனில் நேற்று சந்தித்தது.

முதலில் பேட் செய்த தமிழகம் 5 விக்கெட்டுக்கு 189 ரன்கள் குவித்தது. ஹரி நிஷாந்த் 92 ரன்களும் (8 பவுண்டரி, 3 சிக்சர்), கேப்டன் தினேஷ் கார்த்திக் 46 ரன்களும் (17 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி அசத்தினர்.

தொடர்ந்து ஆடிய ஜார்கண்ட் அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 123 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் தமிழக அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்