இந்திய வீரர்கள் மீது இனவெறி தாக்குதல் விவகாரம்! மன்னிப்பு கேட்டது அவுஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம்

Report Print Santhan in கிரிக்கெட்
127Shares

இந்திய வீரர்களை இனரீதியாக ரசிகர்கள் விமர்சனம் செய்ததற்கு அவுஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் மன்னிபு கோரியுள்ளது.

இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்றது. மூன்றாவது நாளான நேற்று, அவுஸ்திரேலியா அணி துடுப்பெத்தாடிக் கொண்டிர்ந்த போது, பவுண்டரி எல்லையில் பீல்டிங் செய்து கொண்டிருந்த இந்திய வீரர்கள் சிராஜ், பும்ராவை பார்த்து, கேலரியில் இருந்த ரசிகர்கள் சிலர், இனவெறியை துாண்டும் வகையில் குரங்கு என திட்டினார்.

இது குறித்து அவர்கள் ரஹானேவிடம் தெரிவிக்க, உடனே ரஹானே நடுவர்களிடம் புகார் தெரிவிக்க, போட்டி முடிந்த பின், நீண்ட நேரம் இந்திய வீரர்கள் நடுவர்களிடம் பேசிக் கொண்டிருந்தனர். இதன் பின் இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில், அவுஸ்திரேலியாவிடம் முறைப்படி புகார் அளிக்கப்பட்டது.

நான்காம் நாளான நேற்றும், இந்திய வீரர்களை, அவுஸ்திரேலியா ரசிகர்கள் இனவெறியை தூண்டும் வகையில் விமர்சனம் செய்தனர்.

இதனையடுத்து கவனத்தை ஈர்க்கும் வகையில், முகமது சிராஜ், பவுலிங் செய்வதை நிறுத்தினார். கேப்டன் ரஹானே, சிராஜிடம் பேசிய பிறகு, நடுவர்களிடம் புகார் அளித்தார்.

தொடர்ந்து மைதான பாதுகாப்பு அதிகாரிகளை, ரசிகர்களை மைதானத்தில் இருந்து வெளியேற்றினர். இதன் பின்னரே போட்டி மீண்டும் துவங்கியது. இதனால், மைதானத்தில் பரபரப்பு நிலவியது

இதனை தொடர்ந்து அவுஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இனரீதியாக தாக்குதல் நடத்துபவர்களை அவுஸ்திரேலியா கிரிக்கெட் ஒரு போதும் அனுமதிக்காது. வரவேற்காது.

தரக்குறைவாக நடந்து கொண்டவர்களை வன்மையாக கண்டிக்கிறோம். சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இது தொடர்பாக ஐசிசி விசாரணை நடத்தி வருகிறது. அதன் முடிவுக்காக காத்திருக்கிறோம். இந்திய வீரர்களை திட்டியவர்கள் மீது கடும் தண்டனை எடுப்பதுடன், அவர்கள் நீண்ட காலம் தடை விதிப்பது, பொலிசாரிடம் ஒப்படைப்பது குறித்தும் பரிசீலனை செய்யப்படும்.

இந்த விவகாரத்தை நாங்கள் மிகவும் தீவிரத்துடன் அணுகுவோம். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து எங்களின் விதிப்படி அவுஸ்திரேலியா மைதானங்களில், இனி அந்த நபர்களை அனுமதிக்க மாட்டோம்.

இந்திய கிரிக்கெட் அணியினரிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறோம். இந்த விஷயத்தில் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கிறோம் என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்