சிட்னி டெஸ்ட்: அவுஸ்திரேலியா விளாசல்... இந்திய அணிக்கு இமாலய இலக்கு!

Report Print Basu in கிரிக்கெட்
138Shares

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்டில் இந்திய அணி இமாலய இலக்கை நிர்ணயித்தது அவுஸ்திரேலியா.

அவுஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஒரு நாள் தொடரை இழந்த நிலையில் டி-20 தொரை கைப்பற்றி பதிலடி கொடுத்தது.

இதனை தொடர்ந்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகின்றன. இரண்டு போட்டிகள் முடிந்த நிலையில் தொடர் 1-1 என்ற சமநிலையில் இருக்கிறது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 3வது டெஸ்ட ஜனவரி 7-ஆம் திகதி சிட்னி மைதானத்தில் தொடங்கியது.

முதல் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி முதல் இன்னங்ஸில் ஸ்மித் சதத்தால் 338 ஓட்டங்கள் எடுத்தது.

இதனையடுத்து முதல் இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணி 244 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய அவுஸ்திரேலியா அணி, 3வது நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 102 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

4வது நாள் தொடர்ந்து விளையாடி அவுஸ்திரேலியா அணி, 6 விக்கெட் இழப்பிற்கு 312 ஓட்டங்கள் எடுத்திருந்த போது இரண்டாவது இன்னிங்ஸை டிக்ளேர் செய்து, இந்திய அணி வெற்றிக்கு 407 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்தது.

நாளை 5வது மற்றும் கடைசி நாள் மீதமுள்ள நிலையில் இந்திய அணி 407 என்ற இமாலய வெற்றி இலக்கை நோக்கி சிட்னியில் விளையாடி வருகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்