கடும் நடவடிக்கை தேவை! அவுஸ்திரேலியாவில் இனவெறி தாக்குதலுக்கு ஆளான இந்திய வீரர்கள் தொடர்பில் முக்கிய நபர் பேட்டி

Report Print Raju Raju in கிரிக்கெட்
149Shares

அவுஸ்திரேலிய ரசிகர்கள் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் மீது இனவெறி தாக்குதல் நடத்திய சம்பவத்தில் கடும் நடவடிக்கை தேவை என பிசிசிஐ துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா கூறியுள்ளார்.

இந்தியா - அவுஸ்திரேலியா அணிகள் இடையேயான 3வது டெஸ்ட் சிட்னியில் நடந்துவருகிறது.

இந்த போட்டியின் 3ம் நாளான நேற்று இந்திய வீரர்கள் பும்ரா மற்றும் முகமது சிராஜை இன ரீதியாக அவுஸ்திரேலிய ரசிகர்கள் திட்டியுள்ளனர்.

அவுஸ்திரேலிய ரசிகர்கள் இனவெறியை உமிழும் சம்பவங்கள் இதற்கு முன்பும் பலமுறை அரங்கேறியிருக்கிறது.

இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள பிசிசிஐ துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா, பிசிசிஐ மற்றும் ஐசிசிக்கு இந்த விவகாரம் தெரியும். கிரிக்கெட் ஜென்டில்மேன் கேம். அதில் இதுமாதிரியான விஷயங்களுக்கு இடம் கொடுக்கக்கூடாது.

இந்த விவகாரத்தில் ஆஸ்திரேலிய கோர்ட் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும் இதுமாதிரியான சம்பவங்கள் நடக்காத வண்ணம் நடவடிக்கை இருக்க வேண்டும் என வற்புறுத்தியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்