ஐபிஎல் ஏலத்திற்கு முன்...சென்னை அணியில் இருந்து நீக்கப்படும் முதல் வீரர் இவர் தான்: வெளியான அறிவிப்பு

Report Print Santhan in கிரிக்கெட்
416Shares

அடுத்தாண்டிற்கான ஐபிஎல் தொடர் ஏலம் துவங்குவதற்கு முன், சென்னை அணி நீக்கப்படும் வீரர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர், கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது.

இதையடுத்து, தற்போது 2021-ஆம் ஆண்டிற்கான, ஐபிஎல் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறவுள்ளது. இதற்கான ஏலம் வரும் பெப்ரவரி மாதம் 11-ஆம் திகதி நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் 8 அணிகளும் தங்களது அணியில் இருந்து தக்கவைத்துக் கொள்ளும் மற்றும் நீக்கப்படும் வீரர்களை முடிவு செய்து ஜனவரி 20-ஆம் திகதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று ஐபிஎல் நிர்வாகம் காலக்கெடு விதித்துள்ளது.

இதனால் 8 அணிகளும் தங்களது அணியில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு இருக்கும் வீரர்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் நீக்கப்பட இருக்கும் வீரர்களை அறிவித்துள்ளது.

சென்னை அணியில் நீக்கப்பட இருக்கும் முதல் வீரராக கேதர் ஜாதவை அறிவித்திருக்கின்றனர். இவரைத் தொடர்ந்து ஹர்பஜன் சிங் மற்றும் பியூஸ் சாவ்லா ஆகியோரையும் சென்னை அணி நீக்கப்படுவதற்கான ஆலோசனைகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்